Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரு மெஸ்சியா இல்லைன்னா கோல் அடிக்கும் இயந்திரமா?

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லீகா போட்டித்தொடரில் பார்சிலோனா அணிக்காக, ஹாட்ரிக் கோல் அடித்த அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி லா லீகா ஸ்பானிஷ் லீக் வரலாற்றிலேயே அதிகப்படியான கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லாலீகா கால் பந்து போட்டித் தொடர் வெகு பிரபலம். ரியல் மேட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். செவில்லா அணிக்கு எதிராக பார்சிலோனா அணி ஆடிய போட்டியில் பார்சிலோனாவுக்காக விளையாடிய லியோனல் மெஸ்சி (அர்ஜெண்டினா நாட்டுக்காரர்) ஹாட்ரிக் கோல் அடித்தபோது, ஒரு சாதனையை படைத்தார். அதாவது ஸ்பெயின் லீக்கான லா லீகா வரலாற்றியே அதிகப்படியான கோல் அடித்த சாதனைதான் அது.

Full list of records broken by Lionel Messi

லா லீகா போட்டிகளில் மெஸ்சி மொத்தம் 288 போட்டிகளில் 253 கோல்கள் அடித்துள்ளார். முன்னதாக அத்லட்டிக் பில்பா அணிக்காக விளையாடிய டெல்மோ ஜர்ரா அடித்த 251 கோல்கள்தான் 1955ம் ஆண்டு முதல், சாதனையாக இருந்து வந்தது. மெஸ்சி தனது 13வது வயதில் பார்சிலோனா அகாடமியில் சேர்ந்தார். லா லீகாவின் 10 தொடர்களில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மெஸ்சியின் பெயருக்கு பின்னால் மேலும் பல சாதனைகளும் உள்ளன.

லாலீகா டாப் ஸ்கோரர்- 253 கோல்கள்

பார்சிலோனா அணிக்காக அதிகபட்சமாக கோல் அடித்தவர் - 368 கோல்கள்

சாம்பியன்ஸ் லீக்கின் அதிகபட்ச கோல் ஸ்கோரர் - 71 கோல்கள்

லா லீகா தொடரில் ஒரு சீசனில் அடித்த அதிகபட்ச கோல்கள்-50

ஒரு சீசனில் அதிக கோல்கள் - 68

ஐரோப்பிய கோப்பை விளையாட்டு ஒன்றில் அதிகபட்ச கோல்கள் - 5

லா லிகா தொடரில் அதிக ஹாட்ரிக் கோல்கள் - மொத்தம் 8 முறை

ஒரு காலண்டர் வருடத்தில் அதிக கோல்கள் - 91 கோல்கள், 2012ம் ஆண்டு.

Story first published: Monday, November 24, 2014, 16:02 [IST]
Other articles published on Nov 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+