'ஃபீஃபா பைனல்': கடவுளே மெஸ்ஸி கோல் போடணும்- பிரார்த்திக்கும் அர்ஜென்டினா
பியூனஸ் ஏர்ஸ்: இன்று இரவு நடக்கும் ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்ஸி கோல்கள் அடிக்க வேண்டும் என்று அவரது நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளனர்.
ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று இரவு பிரேசிலில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி்ப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.
இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது.

மெஸ்ஸி
இன்றைய இறுதிப் போட்டியில் மெஸ்ஸி கோல் அடிக்க வேண்டும் என்று அவரது ஆசிரியை மோனிகா டாமினா விரும்புகிறார். இன்றைய போட்டியை நினைத்து மோனிகா டென்ஷனாக உள்ளார்.

ரொசாரியோ
அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ நகரைச் சேர்ந்தவர் மெஸ்ஸி. இன்றைய போட்டியில் அவர் கோல்கள் அடிக்க அந்த ஊர் மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மகான்
இன்றைக்கு மெஸ்ஸி மட்டும் கோல் அடித்து அர்ஜென்டினா வெல்ல உதவினார் என்றால் அவரது நாட்டு மக்கள் அவரை மகானாக கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

1986
1986ம் ஆண்டு நடந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ஜெர்மனியை அர்ஜென்டினா வென்றது. அதே போன்று இன்றும் அர்ஜென்டினா வெற்றி பெற வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications