Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கால்பந்து போட்டி- பயணத்திற்கு தயாராகும் கோவாவின் அரசியல் தலைவர்கள்

பனாஜி: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் படு அமர்க்களமாக பிரேசிலில் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், கோவாவின் அரசியல் தலைவர்களையும் கால்பந்து மோகம் விட்டு வைக்கவில்லை.

பிரேசிலை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர் கோவாவின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள்.

பிரேசில்...கால்பந்து விளையாட்டின் கனவுப் பிரதேசம்.இந்த அருமையான நிகழ்வில் அனைவருமே மகிழ விரும்புவதிலும், பார்த்து ரசிக்க விரும்புவதிலும் அதிசயம் ஒன்றும் இல்லை.

89 லட்சம் செலவில் பயணம்:

89 லட்சம் செலவில் பயணம்:

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை பார்த்து ரசிக்க கோவாவின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் தயாராகி வருகின்றனர்.அதுமட்டுமல்ல அவர்களுக்காக கிட்டதட்ட 89 லட்சத்தை செலவு செய்ய தயாராக உள்ளது கோவா அரசு.

ஆறு, மூணும் ஒன்பது:

ஆறு, மூணும் ஒன்பது:

இந்த மாதம் கோவாவில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள், 3 அமைச்சர்கள் பிரேசிலுக்கு கிளம்ப மூட்டை, முடிச்சுகளை தயார் செய்து விட்டனர்.

அமைச்சர்கள் பட்டியல்:

அமைச்சர்கள் பட்டியல்:

இந்தப் பட்டியலின்படி, ஃபிஃபா உலககோப்பை கால்பந்திற்காக கோவாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் தவாட்கர், மீன்வளத்துறை அமைச்சர் அவெர்டனோ ஃபுர்டாடோ, மின்சாரத்துறை அமைச்சர் மிலிந் நாயக் ஆகிய 3 பேர் பயணிக்கின்றனர்.

எம்.எல்.ஏக்கள் பட்டியல்:

எம்.எல்.ஏக்கள் பட்டியல்:

வாஸ்கோ எம்.எல்.ஏ கரோல்ஸ் அல்மெய்டா, வெலிம் எம்.எல்.ஏ பெஞ்சமின் சில்வா, அல்டோனா எம்.எல்.ஏ கிளென் டிக்ளோ ஆகியோர் பிரதிநிதிகளாகச் செல்கின்றனர்.

தவாட்கரின் முதல் பயணம்:

தவாட்கரின் முதல் பயணம்:

இதுதான் கோவா விளையாட்டுத்துறை அமைச்சர் தவாட்கரின் முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப்பயணம் ஆகும்.இந்த குழுவானது ஜூலை 4 மற்றும் ஜூலை 5இல் நடைபெறும் முதல் மற்றும் இரண்டாவது காலிறுதிச்சுற்றைக் காண உள்ளனர்.

போட்டிகளின் விவரங்கள்:

போட்டிகளின் விவரங்கள்:

இவை முறையே ரியோ டி ஜெனெரியோ மற்றும் எஸ்டாடியோ காஸ்டேலியோ ஆகிய இடங்களில் நடக்க இருக்கின்றன.மேலும், ஜூலை 8 மற்றும் ஜூலை 9 இல் நடக்க இருக்கும் அரையிறுதிச் சுற்றுகளையும் பார்வையிட உள்ளனர்.இவை முறையே எஸ்டாடியோ மற்றும் சாவோ பாவ்லோவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 13, 2014, 12:56 [IST]
Other articles published on Jun 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+