Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி

மும்பை : பரபரப்பான இந்தியன் சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டி, கோவாவில் அடுத்தமாதம் 14ம் தேதி நடைபெறவுள்ளதாக நீதா அம்பானி அறிவித்துள்ளார்.

கால்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள ரசிகர்களை அதிகமாக கொண்ட கோவாவில் வரும் 14ம் தேதி இரவு 7.30 மணிக்கு இந்தியன் சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெறும் என்று கால்பந்தாட்ட வளர்ச்சி குழுமத்தின் ஸ்தாபகத் தலைவர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியன் சூப்பர் லீக்கின் முக்கிய அணியாக எஃப்சி கோவா விளங்குவதாக தெரிவித்த நீதா அம்பானி, கோப்பையை வெல்ல வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

இறுதிப்போட்டியில் கோவா

இறுதிப்போட்டியில் கோவா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் போட்டிகள் பரபரப்பாக நடந்த முடிந்துள்ள நிலையில், தற்போது இந்த தொடர் தனது இறுதிப்போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த ஆறாவது சீசனின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்ற போதிலும், இரண்டு சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் கோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிடம் தோற்ற கோவா

சென்னையிடம் தோற்ற கோவா

கோவாவில் கடந்த 2015ல் இந்தியன் சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டி நடத்தப்பட்டது. சென்னையின் எஃப்சி மற்றும் எஃப்சி கோவா இடையில் நடைபெற்ற இந்த போட்டியில் 2க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னையின் எஃப்சியிடம் எஃப்சி கோவா தோற்றது. 90 நிமிடங்கள் வரையில் 2க்கு 1 என்ற புள்ளி கணக்கில் எஃப்சி கோவா முன்னிலையில் இருந்த நிலையில் இறுதி நேர ஆட்டம் திசைமாறியது.

நீதா அம்பானி அறிவிப்பு

நீதா அம்பானி அறிவிப்பு

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியன் சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டி கோவாவில் நடைபெறவுள்ளதாக கால்பந்தாட்ட விளையாட்டு வளர்ச்சி குழுமத்தின் ஸ்தாபக தலைவர் நீதா அம்பானி இன்று தெரிவித்துள்ளார். வரும் மார்ச் மாதம் 14ம் தேதி இரவு 7.30 மணியளவில் கோவாவில் இறுதிப்போட்டி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

நீதா அம்பானி பெருமிதம்

நீதா அம்பானி பெருமிதம்

கோவாவில் அதிகமான கால்பந்தாட்ட ரசிகர்கள் உள்ளதாக பெருமை தெரிவித்த நீதா அம்பானி, ஐஎஸ்எல்லின் இறுதிப்போட்டி அங்கு நடைபெறுவது பொருத்தமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். அதிமான ரசிகர்களை கொண்ட கோவாவில் எஃப்சி கோவா அணி பங்கேற்கும் இறுதிப்போட்டி நடைபெறுவதும் பொருத்தமே என்றும் அவர் கூறியுள்ளார்.

39 புள்ளிகளுடன் முதலிடம்

39 புள்ளிகளுடன் முதலிடம்

மும்பையுடன் எஃப்சி கோவா மோதிய அரையிறுதியில் வெற்றி கொண்டுள்ள நிலையில், 39 புள்ளிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் எஃப்சி கோவா மிகவும் திறமையான மற்றும் கடந்த 6 வருடங்களாக நிலையான அணியாக செயல்பட்டு வருவதாகவும் நீதா அம்பானி கூறியுள்ளார்.

முன்னணி வீரருக்கும் பாராட்டு

முன்னணி வீரருக்கும் பாராட்டு

மேலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள எஃப்சி கோவா அணியின் கேப்டன் மந்தருக்கு பாராட்டு தெரிவித்துள்ள நீதா அம்பானி, அதிக கோல்களை குவித்துவரும் ஃபெரான் கொரோமினாஸ் மற்றும் அந்த அணியின் மற்ற வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த அணி கோப்பையை வெல்லவும் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

ஏஎப்சி கோப்பை தகுதிச்சுற்று

ஏஎப்சி கோப்பை தகுதிச்சுற்று

இதனிடையே இந்த ஆண்டு முதல் இந்தியன் சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணியினர் ஏஎப்சி கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடுவார்கள். மேலும் இறுதிப்போட்டியில் வெற்றி மற்றும் லீக்கில் வெற்றி பெறும் அணி இரண்டும் ஒன்றாக இருந்தால், பின்பு லீக்கின் ரன்னர்-அப் அணி, பெர்த்தில் நடைபெறவுள்ள ஏஎப்சி கோப்பைக்கான தகுதிச்சுற்றில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, February 23, 2020, 18:40 [IST]
Other articles published on Feb 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+