Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

210 அடி தூரத்தில் இருந்து கோலடித்த கோல் கீப்பர்

டெல்லி: பெனால்டி அல்லது ப்ரீ கிக் வாய்ப்புகளை கோல் கீப்பர்கள் கோலாக்குவது எல்லாம் சாதாரணம். தன்னுடைய பகுதியில் இருந்து எதிர் பக்கத்தில் உள்ள கோலை நோக்கி பந்தை உதைத்து கோலாக்குவது அவ்வளவு சுலபமானது அல்ல. ஸ்பெயினில் நடந்த உள்ளூர் போட்டியில், 210 அடி தொலைவில் இருந்து கோலடித்து அசத்தினார் கோல் கீப்பர்.

Goal keeper scored


கால்பந்து விளையாட்டுக்கு புகழ்பெற்ற ஸ்பெயினில் உள்ளூர் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் லுகோ என்ற கிளப் அணியின் கோல் கீப்பர் ஜூவான் கார்லோஸ் இந்த அசாத்திய கோல் அடித்தார்.

லுகோ அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில், லுகோ அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு தடுக்கப்பட்டு, பந்து வேகமாக வந்தது. அப்போது கிட்டத்தட்ட, தன்னுடைய கோல் கம்பத்துக்கு அருகில் இருந்த கார்லோஸ், அங்கிருந்து பந்தை வேகமாக உதைத்தார். அது, 210 அடி தூரத்துக்கு பறந்து சென்று நேராக கோலானது. லுகோ அணி 3-1 என்ற கணக்கில் வென்றது.

தன்னுடைய 30வது பிறந்த நாளில் அவர் இந்த கோல் அடித்தது சிறப்பாகும்.

பிரேசிலின் ரோஜரியோ செனி, அதிக கோலடித்த கோல் கீப்பர் என்ற பெருமையை பெறுகிறார். 1990 முதல் 25 ஆண்டுகள் விளையாடிய அவர், 131 கோல்கள் அடித்துள்ளார்.




Story first published: Monday, January 22, 2018, 19:23 [IST]
Other articles published on Jan 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+