Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சமமாக நிற்கும் மெஸ்ஸி,எம்பாப்பே.. உலகக்கோப்பை ஒருபக்கம் இருக்கட்டும்.. கோல்டன் பூட் விருது யாருக்கு?

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே இருவரும் தலா 5 கோல்கள் அடித்துள்ளனர். இதனால் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் விருதை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு பிரான்ஸ், அர்ஜென்டினா, குரோஷியா மற்றும் மொராக்கோ ஆகிய அணிகள் முன்னேறின.

இதில் முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் மொராக்கோ அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அர்ஜென்டினா கனவு பலிக்குமா?

அர்ஜென்டினா கனவு பலிக்குமா?

இதில் பிரேசிலுக்கு பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைக்க பிரான்ஸ் அணி மும்முரமாக உள்ளது. அதேபோல் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்பதால், அவரை உலகக்கோப்பையுடன் வழியனுப்ப வேண்டும் என்று அர்ஜென்டினா வீரர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

கோல்டன் பூட் ரேஸ்

கோல்டன் பூட் ரேஸ்

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் விருதிற்கான பந்தயமும் சூடுபிடித்துள்ளது. இதில் பிரான்ஸ் அணியின் 23 வயதாகும் நட்சத்திர வீரர் எம்பாப்பே ஐந்து கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார். லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு கோலும், டென்மார்க் அணிக்கு எதிராக இரண்டு கோலும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

சமன் செய்த மெஸ்ஸி

சமன் செய்த மெஸ்ஸி

அதேபோல் காலிறுதிக்கு முந்திய சுற்றில் போலந்து அணிக்கு எதிராக இவர் அடித்த இரண்டு கோல் அணியை காலிறுதிக்கு முன்னேற முக்கிய காரணமாக அமைந்தது. ஐந்து கோல்களும் ஃபீல்ட் கோல் என்பது கூடுதல் சிறப்பாகும். அதுமட்டுமல்லாமல் 4 அசிஸ்ட்களும் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் ஐந்து கோல்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இவர் மூன்று பெனால்டி கோல், இரண்டு ஃபீல்ட் கோல் அடித்துள்ளார்.

 பின்தொடரும் ஜீருட்

பின்தொடரும் ஜீருட்

அதேபோல் பிரான்ஸ் அணியின் ஜீரூட் நான்கு கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தை உள்ளார். இவர்கள் மூவரும் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர். இதனால் உலகக்கோப்பைத் தொடரில் கோல்டன் பூட் விருதை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

யாருக்கு அதிக வாய்ப்பு?

யாருக்கு அதிக வாய்ப்பு?

கோல்டன் பூட் விருதை வெல்வதற்கு அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மிக முக்கிய போட்டிகளான காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் எம்பாப்பே கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் அர்ஜென்டினா அணியின் கள வியூகம் அனைத்தும் மெஸ்ஸியை மையப்படுத்தியே உள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் யார் அதிக கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்படும். உலகக்கோப்பை யார் வெல்வார்கள் என்பதற்கு இணையாக கோல்டன் பூட் விருதை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Story first published: Thursday, December 15, 2022, 18:48 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+