Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருமணம் செய்ய அழைக்கிறார்கள்.. நண்பர்களும் பயப்படுகிறார்கள்.. குரோஷியா தேசியக்கொடி ஆடை அழகி இவானா!

தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர் மூலம் பிரபலமான குரோஷியா மாடலும், ரசிகையுமான இவானா நோலை ஏராளமானோர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த நவம்பர் 20ம் தேதி தொடங்கியது. இதனை நேரில் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் கத்தாரில் குவிந்தனர். இதனால் கத்தார் நாடே விழாக் கோலம் பூண்டது.

இதனிடையே ஃபிஃபா உலக கோப்பையை காணும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கத்தார் நாட்டில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடுகள் உள்ளன. கத்தாரில் பெண்கள் உடல் அங்கம் தெரியாதவகையில் உடை அணிய வேண்டும்.

ஆடை கட்டுப்பாடு

ஆடை கட்டுப்பாடு

ஆனால் மேற்கத்திய நாடுகளில் போட்டிகளை காண மைதானங்களுக்கு செல்லும் ரசிகைகளுக்கு உடை கட்டுப்பாடுகள் கிடையாது. இந்த நிலையில், பெண்கள் கண்ணியமாகத்தான் உடையணிய வேண்டும் என்றும், கண்டபடி உடை அணியக்கூடாது என்றும் கத்தார் நாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதேபோல் மைதானங்களில் பீர் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டன.

குரோஷிய ரசிகை

குரோஷிய ரசிகை

இருந்தும் ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படவில்லை. இதனிடையே குரோஷியா அணி விளையாடிய போட்டிகளில், அந்த நாட்டின் ஜெர்சியில் ஆடை தைத்து அணிந்து வந்த மாடல் அழகியான இவானா நோல் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். ஒவ்வொரு முறை இவானாவை கேமரா காட்டும் போது, சமூக வலைதளங்களில் அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது.

இவானா நோல் பேட்டி

இவானா நோல் பேட்டி

அதுமட்டுமல்லாமல் குரோஷியா மாடலான இவானா நோலை சந்திக்க ஏராளமானோர் விருப்பம் தெரிவித்தனர். மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேவும் இவானாவுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே காத்திருந்தது. இதுகுறித்து இவானா நோல் கூறுகையில், ஃபிஃபா உலகக்கோப்பையை கொண்டாட்டத்துடன் பார்த்து வருகிறார். நான் அழகாக இருப்பதால், என்னை மக்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்று நினைக்கிறேன்.

விருப்பமில்லை

விருப்பமில்லை

ஆனால் கத்தாரில் யாரையும் சந்திக்க விருப்பமில்லை. என்னை பொறுத்தவரை, மக்களை மகிழ்விக்க வேண்டும். அது மட்டுமே போதுமானது. ரசிகர்கள் எங்கு சென்றாலும் அன்பை பொழிகிறார்கள். அதுமட்டுமல்லாமல், மைதானத்தில் போட்டியை பார்க்க சென்றால், எனது நண்பர்கள் என்னுடன் அமர்வதில்லை. வேறு இடத்திற்கு வேகமாக பறந்துவிடுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு கேமரா முன் வர விருப்பமில்லை என்று தெரிவித்தார்.

கால்பந்து வீரர்கள் ஆவல்

கால்பந்து வீரர்கள் ஆவல்

அதேபோல் கத்தாரிலேயே இவானாவை திருமணம் செய்துகொள்ள ஏராளமானோர் விருப்பம் தெரிவித்ததாகவும், சில கால்பந்து வீரர்களும் இவானாவை சந்திக்க ஆவலாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியது. இதுகுறித்து இவானாவிடம் எழுப்பிய கேள்விக்கு, உலகக்கோப்பைத் தொடரின் போது யாரையும் சந்திக்க விருப்பமில்லை என்று தெரிவித்தார்.

Story first published: Sunday, December 18, 2022, 15:09 [IST]
Other articles published on Dec 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+