For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஹாட்ரிக் கோலால் சென்னையின் எப்சிக்கு தோல்வி

By Staff

குவஹாத்தி: இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் லீகில், சீமின்லென் டோங்கலின் ஹாட்ரிக் கோல் அடிக்க,. சென்னையின் எப்சி எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி வென்றது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. 2வது சீசனின் சாம்பியனான சென்னையின் எப்சி, இந்த சீசனின் 51வது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதியது.

Hat-trick by Indian player


சென்னையில் நடந்த ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சென்னையின் எப்சி வென்றிருந்தது. மேலும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் சென்னையின் எப்சியும், 10வது இடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் இருந்தன.

அதனால் இந்தப் போட்டியிலும் சென்னையின் எப்சி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நார்த் ஈஸ்ட் அணியின் சீமின்லென் டோங்கல் சுற்றிச் சுழன்று அடித்து தூள் கிளப்பினார்.

ஆட்டத்தில், 42, 46, 68வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார் டோங்கல். இதன் மூலம், அந்த அணிக்கு முதல் ஹாட்ரிக்குடன், இந்த போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் இந்திய வீரராகவும் அவர் உள்ளார்.

பஸ் கட்டணம் எந்த ரூட்டுக்கு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது புரியாமல் தவிக்கும் பயணி போல சென்னையின் எப்சி வீரர்கள் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று இன்னும் யோசித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வெற்றியின் மூலம், 10 போட்டிகளில் மூன்றாவது வெற்றியை நார்த்

ஈஸ்ட் யுனைடெட் அணி பெற்றுள்ளது. 10 புள்ளிகளுடன், 9வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோல்வியடையாத சென்னையின் எப்சி, 11 போட்டிகளில் 20 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. வரும் 25ம் தேதி ஏடிகே அணியுடன் மோதுகிறது சென்னையின் எப்சி

Story first published: Saturday, January 20, 2018, 17:42 [IST]
Other articles published on Jan 20, 2018
English summary
North East prevailed over Chenniyin FC in the ISL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X