அர்ஜென்டினாவை வெறுக்கிறோம், ஆனால் மெஸ்ஸியை மட்டும் ரொம்ப பிடிக்கும்: பிரேசில் ரசிகர்கள்
சா பாலோ: அர்ஜென்டினா கால்பந்து அணியை பிடிக்கவில்லை ஆனால் அந்த அணி வீரர் லயனல் மெஸ்ஸியை மட்டும் மிகவும் பிடித்துள்ளது என்று பிரேசில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் விளையாடும் அர்ஜென்டினா அணியை பிரேசில் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.
இது குறித்த விவரத்தை பார்ப்போம்.

அர்ஜென்டினா
அர்ஜென்டினா அணியை பிரேசில் ரசிகர்களுக்கு பிடிக்கவே இல்லை. அதே சமயம் அந்த அணி வீரரான லயனல் மெஸ்ஸியை மட்டும் பிரேசில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

ரொனால்டோ
பிரேசில் தேசிய அணியில் வெளிநாட்டவர் ஒருவரை சேர்ப்பதாக இருந்தால் நான் மெஸ்ஸியை தான் சேர்ப்பேன் என்று முன்னாள் பிரேசில் வீரர் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

மாரடோனா
மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்காக விளையாடவில்லை என்றால் அவரை எங்களுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். நான் டீகோ மாரடோனாவை விட மெஸ்ஸியை அணியில் சேர்க்கவே விரும்புகிறேன் என்றார் ரொனால்டோ.

டி சர்ட்
பிரேசில் ரசிகர்கள் 10 என்ற எண் போட்ட மெஸ்ஸி டி சர்ட்டை அணிந்து அவர் ஆடும்போது உற்சாகப்படுத்துவதை காண முடிகிறது.

மெஸ்ஸி
மெஸ்ஸி உலகக் கோப்பையில் இதுவரை 4 கோல்கள் அடித்துள்ளார். பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நேமாரும் இதுவரை 4 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications