For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

முதல் முறையாக பைனல்... குரேஷியாவில் களைகட்டிய கொண்டாட்டம்... இன்னும் பாக்கி இருக்கு!

ஃபிபா உலகக் கோப்பை அரை இறுதியில் இங்கிலாந்தை வென்று குரேஷியா பைனல் நுழைந்தது. இந்த வெற்றியை குரேஷிய மக்கள் கொண்டாடினர்.

Recommended Video

முதல் முறையாக பைனலில் குரேஷியா...பிரான்ஸை சந்திக்கிறது!- வீடியோ

ஜாக்ரெப்: ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பைனலுக்கு தங்களுடைய நாட்டு அணி முன்னேறியதை, குரேஷிய மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொண்டாட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் நேற்று இரவு நடந்த அரை இறுதியில் இங்கிலாந்தை 2-1 என வென்றது குரேஷியா. இதன் மூலம் முதல் முறையாக உலகக் கோப்பை பைனலுக்கு முன்னேறியது.

டுவிட்டர் உள்பட சமூகதளங்களில் குரேஷியாவுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. இந்த நிலையில் குரேஷியாவின் தலைநகர் ஜாக்ரெப் உள்பட பல்வேறு நகரங்களில் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன.

1991ல் சுதந்திரம் பெற்றது குரேஷியா. அப்போது நடந்த கொண்டாடங்களை மிஞ்சும் வகையில், நேற்று ரசிகர்கள் தூள் கிளப்பினர்.

தெருவெங்கும் ரசிகர்கள்

தெருவெங்கும் ரசிகர்கள்

ஜாக்ரெப் உள்பட பல்வேறு நகரங்களில் பொது இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி, அரை இறதி ஆட்டத்தை பார்த்தனர். 109வது நிமிடத்தில் மரியோ மன்ட்ஜூகிக் கோலடிக்க 2-1 என முன்னிலை பெற்றது குரேஷியா.

களைகட்டிய கொண்டாட்டம்

களைகட்டிய கொண்டாட்டம்

அப்போது ரசிகர்களின் கொண்டாட்டம் உச்சத்தை எட்டியது. அணியின் சிவப்பு, வெள்ளை கட்டம் போட்ட சீருடையில் இருந்த ரசிகர்கள், பட்டாசுகளை வெடித்தும், கொடிகளை பறக்க விட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது சாம்பிள்தான்

இது சாம்பிள்தான்

குரேஷியாவின் பல பகுதிகளில் இதுபோன்ற கொண்டாட்டம் விடிய விடிய நடந்தது. முதல் முறையாக பைனல் சென்றுள்ளதால் நடந்துள்ள இந்த கொண்டாட்டம் ஒரு சாம்பிள்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

15ம் தேதி பைனல்

15ம் தேதி பைனல்

வரும் 15ம் தேதி நடக்கும் பைனலில் பிரான்ஸை சந்திக்கிறது குரேஷியா. அந்தப் போட்டிக்குப் பிறகு தங்களுடைய கொண்டாட்டம் தொடரும் என்று உற்சாகத்தில் குரேஷிய ரசிகர்கள் மிதக்கின்றனர்.

Story first published: Thursday, July 12, 2018, 13:56 [IST]
Other articles published on Jul 12, 2018
English summary
Celebrations started in croatia after their team enters final of fifa world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+