Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த வீரர் வந்துட்டார் பாஸ்.. இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. மான்செஸ்டர் சிட்டி கோச் கார்டியாலோ!

லண்டன்: மான்செஸ்ட் சிட்டி அணியின் நட்சத்திர டிஃபெண்டரான ஜான் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது நிம்மதியை அளிப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியாலோ தெரிவித்துள்ளார்.

2023-24 பிரீமியர் லீக் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லிவர்பூல், ஆர்சனல், மான்செஸ்டர் சிட்டின், ஆஸ்டன் வில்லா உள்ளிட்ட அணிகள் சாம்பியன்ஷிப்பை வெல்ல முட்டி மோதி வருகின்றன. இந்த நிலையில் நாளை இரவு நடக்கவுள்ள போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்த்து பிரெண்ட்ஃபோர்ட் அணி களமிறங்கவுள்ளது.

He’s really good – Pep Guardiola sure John Stones is over worst injury woes

கடந்த பிரீமியர் லீக் சீசனின் போது பிரெண்ட்ஃபோர்ட் அணி ஈத்தன் பின்னாக்கின் அபார கோல் மூலமாக மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இருப்பினும் கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றது. இந்த நிலையில் தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் நாளைய ஆட்டத்தில் பிரெண்ட்ஃபோர்ட் அணியை எதிர்த்து மான்செஸ்டர் சிட்டி அணி களமிறங்கவுள்ளது.

பிரெண்ட்ஃபோர்ட் அணியை பொறுத்தவரை கடைசியாக ஆடிய 7 போட்டிகளில் 6ல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த சீசனுடன் இம்முறை கூடுதல் பலத்துடன் மான்செஸ்டர் சிட்டி அணி விளையாடி வருகிறது. ஹாலண்ட், கெவின் டி ப்ரூன் இருவரும் அபார ஃபார்மில் உள்ளனர். அதேபோல் ஜான் ஸ்டோன்ஸ் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

மான்செஸ்டர் அணியின் முக்கியமான டிஃபெண்டரில் ஒருவரான ஜான் ஸ்டோன்ஸ் களமிறங்க உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியாலோ தெரிவித்துள்ளார். இந்த போட்டி குறித்து பெப் கார்டியாலோ பேசுகையில், ஜான் ஸ்டோன்ஸ் காயத்தில் இருந்து மீண்டும் வந்துள்ளார். கணுக்காலில் ஏற்பட்ட காயம் என்பதால், ரிஸ்க் குறைவு தான். பர்ன்லி அணிக்கு எதிரான போட்டியில் நல்லபடியாக விளையாடினார்.

ஆனால் அவர் இன்னும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். இந்த சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள் பலரும் காயத்தால் சிக்கியுள்ளனர். ஆனால் ஜான் ஸ்டோன்ஸ் விரைவாக குணமடைந்துள்ளார் என்று கூறினார். தொடர்ந்து பிரெண்ட்ஃபோர்ட் பயிற்சியாளர் தாமஸ் பிராங்க் குறித்த கேள்விக்கு, அவர் நம்ப முடியாத பல விஷயங்களை சிறப்பாக செய்கிறார். அந்த அணியின் பயிற்சியாளராக நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அந்த அணியில் மிகச்சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Story first published: Sunday, February 4, 2024, 16:43 [IST]
Other articles published on Feb 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+