Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாரடோனாவானார் மெஸ்ஸி... நாக் அவுட் முன்னேறியது அர்ஜென்டினா!

Recommended Video

அசத்திய மெஸ்ஸி...அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா...வீடியோ

மாஸ்கோ: 1986ல் நடந்த உலகக் கோப்பையை யாரும் மறக்க முடியாது. மரடோனா என்ற தனிமனிதர் அர்ஜென்டினா அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார். தற்போது அதே நிலையில் உள்ளார் அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி.

இந்த உலகக் கோப்பை துவங்குவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றில் தனிநபரை சார்ந்து ஒரு நாடு இருப்பது என்பது புதிதல்ல. அதுதான் அர்ஜென்டினாவின் வரலாறும்.

தற்போது ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக அர்ஜென்டினா உள்ளது. அதற்கு காரணம், லியோனல் மெஸ்ஸி. தனது நான்காவது உலகக் கோப்பையில் பங்கேற்கும் மெஸ்ஸி, மற்ற போட்டிகளில் அர்ஜென்டினா மற்றும் கிளப் அணிகளுக்கான ஆட்டத்தில் மேஜிக் செய்து அசத்தியுள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் போர்ச்சுகல்லின் ரொனால்டோ மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி தன்னுடைய பங்களிப்பை அளித்துள்ளார்.

கோல் அடிக்கவில்லை

கோல் அடிக்கவில்லை

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மர், எகிப்தின் சலா ஆகியோர் ஏமாற்றத்தையே தந்துள்ளனர். ரொனால்டோ இதுவரை நான்கு கோல்களை அடித்துள்ளார். நெய்மர் மற்றும் சலா தலா ஒரு கோல் அடித்துள்ளனர். முதல் இரண்டு ஆட்டங்களில் கோலடிக்காத மெஸ்ஸி, லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் கோலடித்தார்.

முதல் கோல் அடித்தார்

முதல் கோல் அடித்தார்

நைஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் தான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் 14வது நிமிடத்தில் அபாரமாக கோலடித்தார் மெஸ்ஸி. அதுவே அர்ஜென்டினா வெற்றிப் பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இதுவரை 17 ஆட்டங்களில் 5 கோல்களை அடித்துள்ளார். இன்று 6வது கோலை அடித்தார். 2006ல் ஒரு கோலும், 2014ல் நான்கு கோலும் அடித்தார்.

அசத்தும் அர்ஜென்டினா

அசத்தும் அர்ஜென்டினா

இந்த உலகக் கோப்பையையும் சேர்த்து 17வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறது அர்ஜென்டினா. அதில் 1978 மற்றும் 1986ல் சாம்பியனானது. 1930, 1990, 2014ல் பைனல் வரை நுழைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

மேஜிக் தொடரும்

மேஜிக் தொடரும்

2006, 2010, 2014 மற்றும் 2018 உலகக் கோப்பைகளில் பங்கேற்றுள்ள மெஸ்ஸி, 2014ல் நடந்த உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். அதை தற்போது மீண்டும் நிரூபித்துள்ளார். அர்ஜென்டினாவை அடுத்தச் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார் மெஸ்ஸி. அடுத்து நடைபெறும் ஆட்டங்களில் மெஸ்ஸியின் மேஜிக்கை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, June 27, 2018, 9:09 [IST]
Other articles published on Jun 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+