Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளே பாயாக வாழ்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.. இந்திய நடிகையுடன் ஊர் சுற்றிய சிஆர்7.. இத்தனை காதலிகளா!

மும்பை : நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 12க்கும் அதிகமான நட்சத்திரங்களுடன் உறவில் இருந்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச விளையாட்டு வீரர்களில் அதிகளவு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்டவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். மெஸ்ஸி, விராட் கோலி ஆகியோரை விடவும் 619 மில்லியன் ஃபாலோயர்களுடன் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். 38 வயதானாலும் கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கிட்டத்தட்ட ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிக சொத்துகளுடன் வலம் வருகிறார்.

History of Cristiano Ronaldo dating affairs and lived his life as a playboy before he found his love with Georgina Rodriguez

அதற்கேற்றபடி அவர் ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். குறிப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய காலங்களில் அதிகளவில் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுவரை கிறிஸ்டியானோ ரொனால்டோ 12க்கும் அதிகமான பெண்களுடன் காதல் உறவில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்முறையாக பிரேசில் மாடலான ஜோர்டானா என்பவரை ரொனால்டோ காதலித்து வந்தார். 2003ஆம் ஆண்டில் தொடர்ங்கிய இவர்களின் காதல் உறவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

அதேபோல் 2005 முதல் 2006 வரை போர்ச்சுகல் மாடலான மெர்சி ரொமேரோவுடன் உறவில் இருந்துள்ளார் ரொனால்டோ. தொலைக்காட்சி தொகுப்பாளரான இவர், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஆடிய போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் சில ஆண்டுகள் நீடித்த இவர்களின் உறவு, அதன்பின் முறிந்துள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி பிரபலமான இமோகன் தாமஸை என்பவரை ரொனால்டோ டேட் செய்தார். தொடர்ந்து போர்ச்சுகல் நடிகை சொராரியாவை டேட் செய்து வந்தார் ரொனால்டோ.

ரொனால்டோவுடன் உறவில் இருந்ததன் காரணமாகவே சொராரியாவுக்கு அதிகளவிலான பட வாய்ப்புகளும் வந்தன. குறிப்பாக கால் கேர்ள் என்ற அதிக வசூல் ஈட்டிய படத்தில் நடித்தார். இவர்களின் உறவு 2006ஆம் ஆண்டு இறுதியில் முடிவுக்கு வந்தது. பின்னர் 2007ஆம் ஆண்டு ஜெம்மா அட்கின்சன் என்பவருடன் ரொனால்டோ காதலில் இருந்தார். பிரிட்டனை சேர்ந்த மாடலான இவர், சில மாதங்கள் மட்டுமே ரொனால்டோவுடன் உறவில் இருந்தார்.

தொடர்ந்து லிஸ்பனில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் இந்திய நடிகை பிபாசா பாசுவை சந்தித்தார் ரொனால்டோ. விஜய் நடித்த சச்சின் படத்தின் 2வது நாயகி இவர் தான். அந்த விருது விழாவிற்கு பின் இரவு கிளப்பிற்கு இணைந்த சென்ற இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியான நிலையில், எப்போதும் நண்பர்கள் என்று விளக்கம் அளித்தார் பிபாசா பாசு. தற்போது இவர் கரண்சிங் க்ரோவரை திருமணம் செய்து குழந்தை பெற்று கொண்டுள்ளார்.

தொடர்ந்து பிரபல மாடலான பாரிஸ் ஹில்டன், நெரைடா கல்லார்டோ, கிம் கர்தாஷியன், இரினா ஷைக் உள்ளிட்டோருடன் ரொனால்டோ சில மாதங்கள் உறவில் இருந்துள்ளார். இவர்கள் அனைவரும் ரொனால்டோவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்டாகின. தொடர்ந்து தனது காதல் மனைவி ஜார்ஜினாவுக்கு முன் ஸ்பெயின் நட்சத்திர கார்ட்ரோ என்பவரை ரொனால்டோ டேட் செய்தார். இதனை தொடர்ந்து ஜார்ஜினா ரொட்ரிக்ஸுடன் நீண்ட நாட்களாக உறவில் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து இரட்டை குழந்தைகளை பெற்று கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாடகை தாய் மூலம் ரொனால்டோ குழந்தை பெற்று கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 1, 2024, 9:36 [IST]
Other articles published on Feb 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+