Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலிடத்தில் உள்ள மும்பை அணி... மோத தயாராகும் ஐதராபாத்... வெற்றிக்கு அடித்துக்கொள்ளும் அணிகள்!

வாஸ்கோ : ஐஎஸ்எல் 2020-21 தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அதன் 34வது போட்டி இன்று வாஸ்கோவின் திலக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் மும்பை சிட்டி எப்சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதவுள்ளன.

இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை சிட்டி அணியுடன் இதுவரை ஒரு தோல்வியையும் சந்திக்காத ஐதராபாத் அணி மோதவுள்ளது.

ஐதராபாத் -மும்பை சிட்டி மோதல்

ஐதராபாத் -மும்பை சிட்டி மோதல்

ஐஎஸ்எல் 2020 -21 தொடர் துவங்கி கோவாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி ஐதராபாத் எப்சி மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகளுக்கிடையில் வாஸ்கோவின் திலக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை சிட்டி அணியுடன் ஐதராபாத் அணி மோதுகிறது.

தோல்வியை சந்திக்காத ஐதராபாத்

தோல்வியை சந்திக்காத ஐதராபாத்

கடந்த சீசன் முதல் இந்த தொடரில் விளையாட துவங்கியுள்ள ஐதராபாத் அணி இதுவரை 23 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை அடைந்துள்ளது. அணியின் சக்சஸ் ரேட் 17.39%. இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றும் 3 போட்டிகளை டிரா செய்துள்ள அந்த அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.

முதலிடத்தில் மும்பை சிட்டி

முதலிடத்தில் மும்பை சிட்டி

இந்நிலையில் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை கண்ட மும்பை சிட்டி அணி, அடுத்தடுத்து 4 போட்டிகளில் வெற்றியும் கடந்த ஜாம்ஷெட்பூர் அணியுடனான போட்டியை டிராவும் செய்து ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து நிலைத்துள்ளது. இந்த அணியின் சக்சஸ் ரேட் 39.62 சதவிகிதம்.

முதலிடத்தை தக்கவைக்க போட்டி

முதலிடத்தை தக்கவைக்க போட்டி

கடந்த சீசனில் இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகளில் மோதிய நிலையில், ஒரு போட்டியில் மும்பை சிட்டி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது. இந்நிலையில் இந்த இரு அணிகளும் இன்று பலப்பரிட்சையில் இறங்கவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை சிட்டி தனது முதலிடத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியும்.

Story first published: Sunday, December 20, 2020, 20:53 [IST]
Other articles published on Dec 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+