Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொல்ல முடியல... அதுதான் ஒரே வருத்தம்... புட்பால் லெஜெண்ட் பீலே ஆதங்கம்!

டெல்லி : ஜூவன்டஸ் வீரர் கிறிஸ்டியானோ ரோனால்டோ பிரேசில் புட்பால் ஜாம்பவான் பீலேவின் 767 கோல்கள் சாதனையை முறியடித்துள்ளார்.

இதையடுத்து ரோனால்டோவிற்கு பீலே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேரில் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூற முடியவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பீலேவின் சாதனை முறியடிப்பு

பீலேவின் சாதனை முறியடிப்பு

போர்த்துகீசிய நட்சத்திரம் ரோனால்டோ சீரிஸ் ஏவிற்காக காக்லிரியை எதிர்கொண்டு ஹாட்ரிக் கோல்களை அடித்து அதிகாரப்பூர்வமாக 770 கோல்களை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து பீலேவின் 767 கோல்களை முறியடித்து சாதனை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 270 மில்லியன் ஃபாலோயர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

கனவு கண்டதில்லை

கனவு கண்டதில்லை

இந்த சாதனை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ளதாகவும், உலக அளவில் தான் முதலிடத்தில் பீலேவின் சாதனையை முறியடிப்பேன் என்று சிறுவயதாக தான் இருந்தபோது கனவு கண்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பிரேசில் புட்பால் ஜாம்பவான் பீலே தனது இன்ஸ்டாகிராமில் ரோனால்டோவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

ஆட்டங்களை பார்த்து வருகிறேன்

ஆட்டங்களை பார்த்து வருகிறேன்

வாழ்க்கை அனைவருக்கும் ஒவ்வொரு பயணத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பீலே, ரோனால்டோவிற்கு அழகான பயணம் அமைந்துள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரோனால்டோவின் ஆட்டங்களை தான் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார் பீலே.

பீலே வருத்தம்

தன்னுடைய தற்போதைய வருத்தம் ரொனால்டோவை கட்டியணைத்து வாழ்த்துக்களை பகிர முடியாததே என்றும் கூறிய பீலே, அதை ஈடுசெய்யும் வகையில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த பல வருடங்களாக தங்களுக்குள் இருக்கும் நட்பு குறித்தும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Monday, March 15, 2021, 23:00 [IST]
Other articles published on Mar 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+