For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"நான் விரும்பும் போது பேசுகிறேன்" மான்செஸ்டர் யுனைடெட் சர்ச்சை.. மனம் திறந்த ரொனால்டோ!

தோஹா: மான்செஸ்டர் யுனைடெட் அணி மற்றும் பயிற்சியாளர் எரிக் டென் பற்றி பேசிய கருத்துக்கள் குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ பதில் அளித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து தொடரின் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதிலும் பொர்ச்சுகள் அணிக்காக உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளதால், அவர் மீதான கவனம் இன்னும் அதிகரித்துள்ளது.

இதனிடையே உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக பத்திரிகையாளர் பிரியர்ஸ் மோர்கனுக்கு ரொனால்டோ அளித்த நேர்காணலில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளரான எரிக் டென் குறித்தும், அணி குறித்தும் பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகியது.

தேசிய கீதமே புறக்கணிப்பு.. ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் கிளப்பிய சர்ச்சை..காரணம் கேட்டு ரசிகர்கள் ஷாக் தேசிய கீதமே புறக்கணிப்பு.. ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் கிளப்பிய சர்ச்சை..காரணம் கேட்டு ரசிகர்கள் ஷாக்

ரொனால்டோவால் வெடித்த சர்ச்சை

ரொனால்டோவால் வெடித்த சர்ச்சை

நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கான முக்கிய போட்டிகளில் ரொனால்டோ விளையாடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் ரொனால்டோ கூறுகையில், பயிற்சியாளர் எரிக் டென் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என தனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்துவிட்ட காரணத்தாலும், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம் என்று கூறியது சர்ச்சையாகியது.

ரொனால்டோ கருத்து

ரொனால்டோ கருத்து

இதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் அணி ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து ரொனால்டோ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், உலகக்கோப்பை போர்ச்சுகல் நாட்டிற்காக வெல்வதற்கான சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.

கவலையில்லை

கவலையில்லை

நான் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் எரிக் டென் பற்றி பேசிய கருத்துக்கள் போர்ச்சுகல் அணியை ஓய்வறையை பாதிக்குமா என்பது பற்றி கவலையில்லை. எனது வாழ்க்கையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. எனக்கு எப்போது தேவையோ அப்போது பேசுவேன். எனது அணியினருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

போர்ச்சுகல் அணி களமிறங்குவதற்கு அதீத பசியுடனும், கவனத்துடனும் உள்ளது. அதனால் எனது நேர்காணல் எங்கள் அணியை கவனத்தை பாதிக்க வாய்ப்பில்லை. அதேபோல் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வரும் ப்ரூனோ ஃபெர்னாண்டஸ் உடனான நட்பு சிறப்பாகவே உள்ளது. எந்தப் பிரச்சினையும் அணியில் இல்லை என்று தெரிவித்தார். இறுதியாக தன்னை பற்றி பேசுவதை நிறுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Story first published: Monday, November 21, 2022, 20:40 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
Cristiano Ronaldo has responded to comments made about Manchester United and coach Erik Ten. He Said, i speak when i want in the pressmeet.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X