Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"விரட்டும் காயம்" நெய்மார் இல்லாத பிரேசில் அணி.. மீண்டு வருவேன்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி!

தோஹா: பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் காயமடைந்துள்ள நிலையில், விரைவில் மீண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் முதல் போட்டியை விளையாடி முடித்துள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே நட்சத்திர கால்பந்து வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து உள்ளனர். குறிப்பாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் காயம் காரணமாக குரூப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

நெய்மார் காயம்

நெய்மார் காயம்

செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மார் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியது. அந்த போட்டியின் 79வது நிமிடத்தில், எதிரணியின் தடுப்பை தகர்த்து நெய்மார் பந்தை கடத்தி சென்றார். அப்போது எதிரணி வீரர் பந்தை பறிக்க முயன்றபோது, நெய்மார் கால் இடறி கீழே விழுந்தார்.

கண் கலங்கிய நெய்மார்

கண் கலங்கிய நெய்மார்

இதில் நெய்மாருக்கு கணுக்காலில் ஏற்பட்ட வலியால் மைதானத்திலேயே துடித்தார். இதன்பின்னர் பிரேசில் அணியின் மருத்துவர் மைதானத்திற்கு வந்து நெய்மாரை பரிசோதனை செய்தனர். இதன் பின்னர் நெய்மார் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார். அதேபோல் மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த போது, அவரது கண்கள் கலங்கின.

பிரேசில் அறிவிப்பு

பிரேசில் அறிவிப்பு

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகளுக்கு எதிரான போட்டியில் நெய்மார் பங்கேற்க மாட்டார் என்று பிரேசில் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நெய்மாருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதற்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த நிலையில் காயம் குறித்து நெய்மார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நெய்மார் பதிவு

நெய்மார் பதிவு

அந்த பதிவில், ஒவ்வொரு முறையும் பிரேசில் ஜெர்சியை காதலுடன் அணியும் போது பெருமையாகவும் உணர்வேன். ஒருவேளை கடவுள் என்னிடம் வந்து எந்த நாட்டில் பிறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டால், பிரேசில் என்றே பதில் அளித்திருப்பேன். என் வாழ்க்கையில் இலக்கை எட்டுவது எப்போதும் சுலபமாக இருந்ததில்லை. இன்றைய நாள் மிகவும் கடினமாக இருக்கிறது. உலகக்கோப்பைத் தொடரின் போது காயமடைந்துள்ளேன். நிச்சயம் காயத்தில் இருந்து வேகமாக மீண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, November 26, 2022, 17:58 [IST]
Other articles published on Nov 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+