Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை... சவுதி அரேபியா - ரஷ்யா ஆட்டம் துவங்கியது!

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பை மிக பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதும் இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் துவங்கியது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

In the Fifa world cup first match russia to fight against saudi arabia

இந்த உலகக் கோப்பைக்கான போட்டி இன்று துவங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதுகின்றன.
----
பிரிவு ஏ
ரஷ்யா - சவுதி அரேபியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி
----
ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றிலேயே, உலகத் தரவரிசையில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் இரண்டு அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக போட்டியை நடத்தும் ரஷ்யா, தரவரிசையில் 70வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 67வது இடத்தில் உள்ளது.
--

முக்கிய வீரர்கள்

ரஷ்யா - ரஷ்ய அணிக்கு உள்ள மிகப் பெரிய பலவீனம், கோல்கள் அடிப்பதுதான். 28 வயதாகும் பெடார் ஸ்மோலோவ் இந்த உலகக் கோப்பையில் கோல்களை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியா - இதுவரை 135 ஆட்டங்களில் பங்கேற்றாலும், உலகக் கோப்பையில் பங்கேற்காத ஒசாமா ஹவ்சாவி, மிகச் சிறந்த தடுப்பாட்டக்காரராக உள்ளார். அவரிடமிருந்து அதிரடி ஆட்டத்தை சவுதி அரேபியா எதிர்பார்க்கிறது.
---
ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் 1993ல் நட்பு போட்டியில் பங்கேற்றது. அதில் சவுதி அரேபியா 4-2 என்ற கணக்கில் வென்றது.

போட்டியை நடத்தும் நாடே உலகக் கோப்பையை வென்றது 1998ல் நடந்தது. பிரான்ஸ் அப்போது உலகக் கோப்பையை வென்றது. இதுவரை உலகக் கோப்பையை நடத்திய நாடுகள் குறைந்தபட்சம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

2010ல் போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே பிரிவு சுற்று ஆட்டங்களிலேயே வெளியேறியது. தற்போது அதே நிலையில் ரஷ்யா உள்ளது. குறைந்தபட்சம் இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ரஷ்யா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, June 14, 2018, 20:40 [IST]
Other articles published on Jun 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+