டோணியின் ராசியா? இந்திய கால்பந்து அணிக்கு முன்னேற்றம்
டெல்லி: மகாவ் அணிக்கு எதிராக வென்று, 2019 ஆசியக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய கால்பந்து அணி, பிபா தரவரிசையில், 2 இடங்கள் முன்னேறியுள்ளது.
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்தி வரும் நிலையில், 2019ல் நடக்க உள்ள ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய சீனியர் அணி தகுதி பெற்றது.

கேப்டன் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மகாவ் அணியை வென்று இந்தத் தகுதியைப் பெற்றது.
இதன் மூலம் பிபா தரவரிசையில், இரண்டு இடங்கள் முன்னேறி, 105வது இடத்தில் உள்ளது.
உலகத் தரவரிசையில், ஜிம்பாப்வே மற்றும் நைஜர் அணிகளுக்கு இடையே இந்தியா உள்ளது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் உள்ள நாடுகளில், 14வது இடத்தில் இந்தியா உள்ளது.
மும்பையில் நடந்த சினிமா நட்சத்திரங்களின் ஆல் ஸ்டார் அணிக்கு எதிராக, விளையாட்டு வீரர்களின் ஆல் ஹார்ட் அணி 7-3 என்ற கோல் கணக்கில் வென்றது. கேப்டன் கூடல் மகேந்திர சிங் டோணி இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.
இவ்வாறு கால்பந்து போட்டி இந்தியாவில் பிரபலமாகி வரும் நிலையில், உலகத் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
Story first published: Tuesday, October 17, 2017, 14:46 [IST]
Other articles published on Oct 17, 2017


Click it and Unblock the Notifications