Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்போதும் உணர்வுகள் மறக்காது.. கால்பந்து விளையாட்டின் GOAT ரொனால்டோ தான்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

மும்பை: கால்பந்து விளையாட்டின் அனைத்து காலத்திற்குமான சிறந்த வீரர் ரொனால்டோ தான் என்றும், விளையாட்டு வீரர்களுக்கு ரொனால்டோ மிகப்பெரிய உத்வேகம் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி போட்டியில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்ததால், போர்ச்சுகல் அணி வெளியேறியது. இதனால் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.

மொராக்கோ அணியுடனான தோல்விக்கு பின், ரொனால்டோ அழுதுகொண்டே ஓய்வறைக்கு திரும்பியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ தனடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

ரொனால்டோ பதிவு

ரொனால்டோ பதிவு

அந்த பதிவில், போர்ச்சுக்கல் நாட்டிற்காக உலகக்கோப்பையை வெல்வதே எனது வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. இந்த கனவை நனவாக்குவதற்காக கடுமையாக போராடினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக என் கனவு முடிவுக்கு வந்தது. போர்ச்சுகல் அணி மீது நான் வைத்திருந்த அர்ப்பணிப்பு உணர்வு ஒரு கணமும் மாறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

பின்வாங்கியதே இல்லை

பின்வாங்கியதே இல்லை

கடந்த 16 ஆண்டுகளில் 5 முறை ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடியுள்ளேன். என்னுடன் எப்போதும் சிறந்த வீரர்கள் உடன் விளையடினர். அப்போது லட்சக்கணக்கான மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். நானும் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன். அனைவரின் நோக்கத்திற்காகவும் போராடும் ஒரு வீரனாக எப்போதும் இருக்கிறேன். நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை.

அழகான தருணங்கள்

அழகான தருணங்கள்

இப்போது இதற்கு மேல் நான் ஏதும் பேச விரும்பவில்லை. நன்றி போர்ச்சுகல். நன்றி கத்தார். இந்த கனவு உயிர்ப்புடன் இருந்த வரை அழகாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ரொனால்டோவுக்கு ஆதரவாக பீலே, எம்பாப்பே, லெப்ரான் ஜேம்ஸ் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு வீரர்கள் பதிவிட்டனர். இவர்களை விடவும், விராட் கோலி ரொனால்டோவுக்காக வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

விராட் கோலி பதிவு

விராட் கோலி பதிவு

ரொனால்டோ குறித்து இந்திய வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், கால்பந்து விளையாட்டுக்காக நீங்கள் செய்த சாதனைகளையும், ரசிகர்களுக்கு நீங்கள் கொடுத்த உணர்வுகளையும் ஒரு கோப்பையின் மூலமாகவோ, ஒரு பட்டத்தின் மூலமாகவோ குறிப்பிட முடியாது. ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எந்தவொரு பட்டம் கொண்டும் விளக்க முடியாது. நானும், என்னை போன்ற ரசிகர்களும் உங்கள் விளையாட்டை பார்க்கும் போது ஏற்படும் உணர்வை எந்த சொல் கொண்டு விவரிக்க முடியாது.

கடவுள் கொடுத்த வரம்

கடவுள் கொடுத்த வரம்

அது கடவுள் கொடுத்த வரம் தான். ஒவ்வொரு முறை களம் புகும்போதும் முழுமையான அர்ப்பணிப்புடன் விளையாடும் ஒரு வீரனுக்கு கடவுள் கொடுத்த ஆசீர்வாதம். என்னை போன்ற ஏராளமான விளையாட்டு வீரர்களுக்கு நீங்கள் மிகப்பெரிய உத்வேகம். கால்பந்து விளையாட்டின் அனைத்து காலங்களுக்குமான சிறந்த வீரர் நீங்களே என்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Monday, December 12, 2022, 11:59 [IST]
Other articles published on Dec 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+