Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நெய்மருக்கு நான் அம்மாடா".. குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ!

சென்னை: காலில் அடிப்பட்டதுபோல் மைதானம் முழுவதும் அங்கப்பிரதட்சணம் செய்யும் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரை பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், இந்திய பெண் ஒருவர் செய்துள்ள காமெடி வீடியோ வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் நடந்து வரும் ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது ஐந்து முறை சாம்பியனான பிரேசில்.

Indian women mocks neymar

கோப்பையை வெல்லக் கூடிய அணியாக பிரேசில் பார்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம். அந்த அணியின் நெய்மர்தான். உலகின் மிகவும் காஸ்ட்லியான வீரரான நெய்மர், சமீபத்தில் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பினார்.

உலகக் கோப்பையில் அவர் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய ஆட்டத் திறனைவிட, அவருடைய நடிப்பு திறமை இந்த உலகக் கோப்பையில் அதிகம் உள்ளதாக சமூகதளங்களில் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். தொட்டதெற்கெல்லாம், காலில் அடிப்பட்டதுபோல, கீழே விழுந்து, உருண்டு, புரண்டு நெய்மர் ஓவர்ஆக்டிங் செய்வதாக விமர்சனம் வந்தன.

இது தொடர்பாக பல மீம்ஸ்கள், வீடியோக்கள் வந்துள்ளன. இந்த நிலையில் இந்திய பெண் ஒருவர் வீட்டில் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உருண்டு புரண்டு செய்யும் சேஷ்டைகள் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் ரகமாக அமைந்துள்ளது.

சூடான டீயை குடித்துவிட்டதால் வலி, காயை நறுக்கும்போது கத்தி பட்டது, மேஜையில் கால் பட்டது என அந்த பெண், நெய்மருக்கு நான் அம்மாடா என்பதுபோல் சூப்பராக ஆக்டிங் கொடுத்துள்ளார்.

சனி, ஞாயிறு லீவுக்குப் பிறகு டிராபிக்கில் நொந்து நூலாகி ஆபிஸ் சென்று சேர்ந்துள்ளவர்களுக்கு இந்த வீடியோ ஒரு சிறந்த மருந்து. என்ஜாய்.

Story first published: Monday, July 9, 2018, 11:40 [IST]
Other articles published on Jul 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+