கால்பந்தில் பெரும் துயரம்.. மைதானத்தில் நிகழ்ந்த மோதல்.. 174 பேர் உயிரிழப்பு.. இந்தோனேஷியாவில் சோகம்
கிழக்கு ஜாவா : இந்தோனேஷிய கால்பந்து ஆட்டத்தில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 174 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
Recommended Video
கிழக்கு ஜாவா பகுதியில் நடைபெற்ற ஆட்டத்தில் அரிமா எஃப் சி அணியும் அதன் எதிரி அணியான பெர்சிபையா சுரபையா அணியும் மோதினர்.
கஞ்சுரஹன் மைதானத்தில் 38 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய அளவுதான் வசதி இருக்கிறது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் 42,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சொந்த அணி தோல்வி
இந்த நிலையில் சொந்த அணியின் அரிமா எப்.சி. அணி இரண்டுக்கு மூன்று என்ற கணக்கில் தனது எதிரி அணியிடம் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து கடுப்பான ரசிகர்கள் ஆடுகளத்திற்குள் புகுந்தனர். அப்போது எதிரணி ரசிகர்களும் உள்ளூர் ரசிகர்களும் களத்தில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதனை அடுத்து அங்கிருந்த போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.

உயிரிழப்பு எதனால்
இதனை எடுத்து பல்வேறு ரசிகர்களும் மைதானத்தை விட்டு வெளியேறும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மைதானத்தில் இருந்த போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை கொண்டு வீசினர். இதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் மற்றும் கூட்ட நெரிசல் சிக்கி ஏராளமான ரசிகர்கள் உயிரிழந்தனர். போலீசாரின் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் தீயில் கொளுத்தப்பட்டன.

174 பேர் உயிரிழப்பு
இதனால் மைதானமே போர்க்களம் போல் காட்சியளித்தது.இதனை அடுத்து காயம் அடைந்த ரசிகர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கோர சம்பவத்தில் இதுவரை 174 பேர் உயிரிழந்தனர் . இந்த சம்பவம் கால்பந்து உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதனை அடுத்து இந்தோனேசியாவில் நடைபெறும் அனைத்து கால்பந்து போட்டிகளையும் நிறுத்த அதிபர் ஜோகோ விடோடு உத்தரவு வழங்கியுள்ளார்.

உயிரிழப்புக்கு காரணம்
போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாலே மூச்சு திணறல் ஏற்பட்டு ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும்போது கூட்டத்தில் சிக்கி உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள உலக கால்பந்து சம்மேளனம் மைதானத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. இந்தோனேஷியா கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இந்தோனேசிய கால்பந்து சமூகத்திற்கு ஒரு கருப்பு நாள் என்று குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications