For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பாடா ஈரான் அணியில் ரொனால்டோ இல்லை.... வெற்றிக்கு தயாராகும் ஸ்பெயின்!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஈரானை ஸ்பெயின் சந்திக்கிறது.

Iran to face spain in the fifa world cup

கசான்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஈரானை சந்திக்கிறது ஸ்பெயின்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஸ்பெயினும் ஈரானும் விளையாடுகின்றன.
----
பிரிவு பி
ஸ்பெயின் - ஈரான்
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி
----
பி பிரிவில் இதுவரை...

* ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது
* போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது.

பி பிரிவின் புள்ளிப் பட்டியலில் ஈரான் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் தலா 1 புள்ளியைப் பெற்றுள்ளன. மொராக்கோ புள்ளி ஏதும் பெறவில்லை.
-----
பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஈரான் மோதின. அந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியே அனைத்து விதத்திலும் ஈரானை விட முன்னிலையில் இருந்தது. டிராவில் முடியும் என்று நினைக்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொராக்கோவின் போஹாதூஸ் சேம் சைட் கோலடிக்க, ஈரான் வென்றது. உலகக் கோப்பையில் ஈரானுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும்.

பி பிரிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மோதினார் என்று கூறும் அளவுக்கு தனி ஆளாக போர்ச்சுகல் அணியை தூக்கிப் பிடித்தார் ரொனால்டோ. இந்த உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அந்த ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோலடித்தார்.

ஸ்பெயின் அணியின் டியாஜோ கோஸ்டா இரண்டு கோல்களும், நாசோ ஒரு கோலும் அடித்தனர். இருப்பினும் அணியின் வெற்றிக்கு அது உதவவில்லை.

உலகக் கோப்பை துவங்குவதற்கு முதல் நாளில் ஸ்பெயின் கோச்சாக இருந்த லோபேடேகய் மாற்றப்பட்டு, முன்னாள் வீரரான பெர்னான்டோ ஹியரோ புதிய கோச்சாக நியமிக்கப்பட்டார். கோச் பிரச்னை ஏதுமில்லை என்று கூறி வரும் ஸ்பெயின், அடுத்தச் சுற்றுக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. அதே நேரத்தில் இன்றைய ஆட்டத்தில் வென்றால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஈரானும் போராடும்.

Story first published: Wednesday, June 20, 2018, 9:16 [IST]
Other articles published on Jun 20, 2018
English summary
Spain to face iran in the group b match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+