Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லாக்கர் ரூமில் உருக்கமான கடிதம் எழுதிய ஈரான் வீரர்கள்.. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நெகிழ்ச்சி

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியத்தை டிரா செய்த பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் சோஃபி மைதானத்தின் லாக்கர் ரூமில் ஈரான் வீரர்கள் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர்கள் உலக அமைதிக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தை ஈரான் 0-0 என டிரா செய்தது. இந்த போட்டிக்கு பின், தங்களுக்கு ஆதரவளித்த லாஸ் ஏஞ்சல்ஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்து ஈரான் வீரர்கள் தங்களது லாக்கர் ரூமில் கடிதம் ஒன்றை விட்டுச் சென்றுள்ளனர்.

Iran Players Leave Heartfelt Peace Note in SoFi Stadium Locker Room After Belgium Draw

அதில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய பெர்சியா முதல் இன்றைய நாகரீக ஈரான் வரை, ஈரானின் ஆன்மா எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும். எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ஈரானியர்களுக்கும் நன்றி. உலக நாடுகள் இடையே அமைதி, மரியாதை மற்றும் நட்பு நிலவட்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும், இந்த கடிதத்தில் #168 மற்றும் #மினாப் ஆகிய ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையிலான போரின் போது, ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு சம்பவத்தை நினைவு கூரும் வகையில் இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போட்டி நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அதிகளவில் ஈரானியர்கள் வசிப்பதால், அவர்கள் மைதானத்திற்கு வந்து ஈரான் வீரர்களுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற ஆதரவைத் தந்தனர்.

அமெரிக்க குடியேற்றத் துறையின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஈரான் வீரர்களால் அமெரிக்காவில் 48 மணி நேரத்திற்கு மேல் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களது பயிற்சி முகாமை மெக்சிகோவின் டிஜுவானா நகருக்கு மாற்றி, அங்கிருந்து போட்டி நடைபெறும் நாட்களுக்கு மட்டும் எல்லை கடந்து வந்து விளையாடினர். விசா விவகாரம் போன்ற பல இன்னல்களுக்கு மத்தியிலும் ஈரான் வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட அவமானம்.. வலுக்கட்டாயமாக கேப்டன் பதவி பிடுங்கப்பட்டது.. LSG சர்ச்சை

ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட அவமானம்.. வலுக்கட்டாயமாக கேப்டன் பதவி பிடுங்கப்பட்டது.. LSG சர்ச்சை

இது குறித்துப் பேசிய ஈரான் பயிற்சியாளர் அமீர் கலேனோய், "உலகக் கோப்பையிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட அணி எங்களது அணி தான். மோசமான சூழ்நிலையிலும் எங்களது வீரர்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்" என்று பாராட்டினார். ஈரான் அணி தனது அடுத்த லீக் போட்டியில் சியாட்டிலில் எகிப்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றால் ஈரான் வரலாற்றுச் சாதனையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

Story first published: Monday, June 22, 2026, 12:36 [IST]
Other articles published on Jun 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+