Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை vs நார்த் ஈஸ்ட் போட்டியில் 7 கோல்கள்.... மாற்றி மாற்றி கோல் அடித்த வீரர்கள்

சென்னை : சென்னையில் அக்டோபர் 18 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் 4 - 3 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற்றது.

5 ஆவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 11ஆவது ஆட்டம் சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணியும், நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியும் மோதின. மாலை சரியாக 7.30 மணிக்கு ஆட்டம் தொங்கியது.

டாஸ் வென்ற சென்னை அணி இடது புறமிருந்து தனது ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையாக மோதின.

சென்னை அசத்தல் துவக்கம்

சென்னை அசத்தல் துவக்கம்

ஆட்டம் தொடங்கிய 5 ஆவது நிமிடத்திலேயே சென்னை அணியின் ரௌலின் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து 15 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் தாய் சிங் ஒரு கோல் அடித்து அணிக்கு மேலும் வலு சேர்த்தார். 2 கோல் போட்டதால் நார்த் ஈஸ்ட் அணி ஆக்ரோஷமாக விளையாடியது.

2 நிமிட இடைவெளியில் கோல்கள்

2 நிமிட இடைவெளியில் கோல்கள்

தொடர்ந்து ஆடிய நார்த் ஈஸ்ட் அணி வீரர் பர்த்லோமி 29 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சென்னைக்கு அதிர்ச்சி அளித்தார். 32 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் தாய் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 2 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து கோல் அடித்ததால் ஆட்டம் சூடு பிடித்தது.

பர்த்தலோமி ஹாட்ரிக்

பர்த்தலோமி ஹாட்ரிக்

இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடித்து வந்த நிலையில் 37 ஆவது நிமிடத்தில், நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தலோமி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இந்த கோல் அடித்த 2 நிமிடங்களுக்குள் அவரே மற்றுமொரு கோல் அடித்து அசத்தினார். இது பர்த்தலோமியின் ஹாட்ரிக் கோல் ஆகும். இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் தலா 3 கோல் அடித்து சமநிலையில் இருந்தன.

அதிர்ச்சி அளித்த ரௌலின்

அதிர்ச்சி அளித்த ரௌலின்

தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஏற்கனவே இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள வீரர்கள் கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரௌலின் அற்புதமாக ஒரு கோல் அடித்து சென்னை அணிக்கு மீண்டும் அதிர்ச்சியைக் கொடுத்தார். இது அந்த அணியின் 4 ஆவது கோல் ஆகும்.

சென்னை முயற்சிகள் வீண்

சென்னை முயற்சிகள் வீண்

பின்னர் 58 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியிலும், 66 ஆவது நிமிடத்தில் சென்னை அணியிலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னை அணி அடுத்த கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்ய பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடிந்தது. இறுதியில் நார்த் ஈஸ்ட் அணி 4 -3 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Saturday, October 20, 2018, 10:06 [IST]
Other articles published on Oct 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+