Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல் 2018 : பெங்களூரு மீண்டும் வெற்றி.. ஏடிகே அணியை வீழ்த்தியது

பெங்களூரு : பெங்களூருவில் டிசம்பர் 13 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஏடிகே அணியை 0 - 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 56 ஆவது கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் பெங்களூரு எஃப்சி அணிக்கும் ஏடிகே அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு எஃப்சி அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - ATK lost to Bengaluru FC in the league match

ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் மானுவலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின 17 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஆல்பர்ட்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 37 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் எரிக் பர்த்தலு அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

முதல் பாதியின் முடிவில் கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடத்தில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதனைத் தொடர்ந்து முதல் பாதியில் 1- 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தை சமன் செய்ய ஏடிகே அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர்.

ISL 2018 - ATK lost to Bengaluru FC in the league match

இரண்டாவது பாதியின் முடிவில் வழங்கப்பட்ட நான்கு நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து 1 - 0 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, December 14, 2018, 10:53 [IST]
Other articles published on Dec 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+