Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாரும் பாத்துக்குங்க.. நாங்களும் முன்னாள் சாம்பியன் தான்.. ஏடிகே முதல் வெற்றி

டெல்லி : ஐந்தாவது இந்தியன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 10 ஆவது ஆட்டம் டெல்லி ஜவஹர்லால் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணியும், கொல்கத்தாவின் ஏடிகே அணியும் மோதின. மாலை சரியாக 7.30 மணிக்கு ஆட்டம் தொங்கியது.

டாஸ் வென்ற டெல்லி டைனமோஸ் அணி இடது புறத்தில் இருந்து தனது ஆட்டத்தைத் தொடங்கியது.

முதல் கோல் அடித்த ஏடிகே

முதல் கோல் அடித்த ஏடிகே

ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே இரு அணிகளும் மிகத் திறமையாக விளையாடின. ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் பல்வந்த் சிங் அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். டெல்லி அணி தங்களது சொந்த மண்ணில் ஆடி வரும் நிலையில் ஏடிகே அணி ஒரு கோல் அடித்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

டெல்லி போராட்டம்

டெல்லி போராட்டம்

இதைத் தொடர்ந்து 35 ஆவது நிமிடத்தில் சந்தோஷ் ஃபௌல் கேம் ஆடினார். ஆனாலும் இரு தரப்பு வீரர்களும் சரி சமமாக விளையாடினர். ஏடிகே அணி அடித்த ஒரு கோலை சமன் செய்வதற்காக டெல்லி அணி தொடர்ந்து போராடியது. ஆட்டத்தின் இறுதியில் 2 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனாலும் டெல்லி டைனமோஸ் அணியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆட்டத்தின் முதல் பாதியில் ஏடிகே அணி 1 -0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

சமன் செய்த டெல்லி

சமன் செய்த டெல்லி

இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. 54 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் பிரீத்தம் கோட்டல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 61 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் சுபத்திற்கு பதிலாக ஆட்ரியா கரோனா களம் இறக்கப்பட்டார். இதே போன்று இரு அணிகளிலும் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடர்நது இரு அணிகளும் கடுமையாக விளையாடின.

கொல்கத்தா முதல் வெற்றி

கொல்கத்தா முதல் வெற்றி

இதையடுத்து 84 ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் எல் மோனி ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்ட நேர இறுதிவரை டெல்லி அணி கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் டெல்லி அணி கோல் எதுவும் போடாததால் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணி வெற்றி பெற்றது. முன்னாள் சாம்பியன் ஏடிகே அணி இந்த சீசனில் தன் முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது.

Story first published: Thursday, October 18, 2018, 12:35 [IST]
Other articles published on Oct 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+