For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரு கெத்துனு பார்ப்போமா?.. முன்னாள் சாம்பியன்கள் சென்னை, கொல்கத்தா மோதல்

ISL 2018 - ATK vs Chennayin FC match preview analysis

கொல்கத்தா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளில் நடப்பு சாம்பியனான சென்னையின் எஃப்சி அணியும், முன்னாள் சாம்பியன் ஏடிகே அணியும் வெற்றி பெற்றே தீருவோம் என்ற கனவுடன் நாளை கொல்கத்தா யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளது.

ஐ.எஸ்.எல் போட்டிகளின் அட்டவணையை வடிவமைக்கும் விதமாக இரு அணிகளுக்கும் ஒரு வெற்றி மிக முக்கியமாக தேவைப்படுகிறது. கொல்கத்தா அணி நான்கு போட்டிகளில் நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் சென்னையின் எஃப்சி அணி ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி தனது திறமையைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஏடிகே அணி தனது சொந்த மண்ணில் இரண்டு தோல்விகளை சந்தித்த பிறகு, அந்த அணி திடீரென்று டெல்லி டைனமோஸ் அணியையும் ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணியையும் வென்றது. அதே நேரத்தில்ஸ்டீவ் காப்பல் தலைமையிலான அந்த அணி 5 அணிகளுக்கு எதிராக விளையாடி மூன்று புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஏடிகே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் கோப்பல், இந்த சீசனில் பல அணிகளின் நிலைமையும் இதுபோலவே உள்ளது. அதே நேரத்தில் ஒரு சில அணிகள் தங்களது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளன. அதே போல் நாங்களும் உயர நினைக்கிறோம். பொதுவாக ஒரு நல்ல அணி என்பது தங்களது சொந்த மண்ணில் ஜெயிக்க வேண்டும். அதுபோல் நாங்கள் நாளைய ஆட்டத்தில் வெல்ல வேண்டும். எங்களுக்கு பெருமளவு ஆதரவு தரும் எங்கள் ரசிகர்கள் முன்பு நாங்கள் நிறைய புள்ளிகளை எடுக்க வேண்டும்.

சென்னை அணியைப் பொறுத்தவரை அதற்கு இன்னும் மூன்று புள்ளிகள் தேவை. இந்த சீசனில் அந்த அணி இன்னும் வெற்றிக்கு தகுதி பெறவில்லை. ஆனால் டெல்லி அணியுடன் ஒரு கோல் டிரா ஆன பிறகு மூன்று போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.

சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி ஒரு நம்பிக்கையான மனிதர். அதனால்தான் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஓரளவு அந்த அணி வீரர்கள் தங்கள் திறமையைக் காட்டினர். ஆனால் ஒரு முன்னாள் சாம்பியனுக்கு இது போதாது.

இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் துணை பயிற்சியாளர் சபீர் பாஷா, நாங்கள் இதுவரை நான்கு ஆட்டங்களில் விளையாடியுள்ளோம், எங்கள் அணியில் சில புதுமுக வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்டத்தின் தன்னைமயைப் புரிந்து கொள்ள சில காலம் ஆகலாம். நாளுக்கு நாள் அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவார்கள் என்றார்..

ஏடிகே அணி எப்போதும் வலுவாக உள்ளது. அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளில் தோற்றார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்கள் நாளை வலுவாக இறங்கி வருவார்கள். அதே நேரத்தில் அவர்களை அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனாலும் எங்கள் அணி வீரர்கள் மிகவும் கடினமாக விளையாடி ஏடிகே அணியினரை முறியடிப்பார்கள் என தான் நம்புவதாக பாஷா தெரிவித்துள்ளார்.

கோப்பல் மற்றும் ஜான் கிரிகோரி ஆகிய இரண்டு பயிற்சியாளர்களுமே எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். யார் ஜெயிப்பார்கள் என்பது நாளை தெரியும்.

Story first published: Thursday, October 25, 2018, 19:19 [IST]
Other articles published on Oct 25, 2018
English summary
ISL 2018 - ATK vs Chennayin FC match preview analysis
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+