For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா - ஏடிகே போட்டி!! யாருக்கு வெற்றி கிடைக்கும்?

கொல்கத்தா : ஹீரோ இந்திய சூப்பர் லீக்கில் இனி சில சுவாரஸ்யமான போட்டிகள் உள்ளன. தென் பகுதியைச் சேர்ந்த சில அணிகள் பலரை ஆச்சரியத்துக்கு ஆளாக்கியுள்ளன. பெங்களூரு எஃப்.சி மற்றும் கேரள பிளாஸ்டர்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோத தயாராகி வருகின்றன. இதே போல் மும்பை அணியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கோவா மற்றும் ஏடிகே அணிகள் இடையே இன்று நடைபெறவுள்ள போட்டி போல் அவை இருக்குமா என்பது சந்தேகமே!!

கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்ட போது, கோவா மற்றும் ஏடிகே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகள் வரலாற்றுக் சிறப்பு மிக்கதாக இருந்தது. ஏடிகே அணியின் பயிற்சியாளர் அண்டோனியா லோபஸ் ஹபாஸ் மற்றும் எஃப்சி கோவா அணியின் மார்க்யூ ராபர்ட் பேயஸ் இடையே ஃபாடோர்டாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மோதல் கால்பந்து போட்டியிலேயே ஒரு புதிய வடிவம் பெற்றது. அதே போன்றதொரு போட்டியான சூழ்நிலை தற்போது மீண்டும் உருவாகியுள்ளது.

ISL 2018 - ATK vs FC Goa match preview

முன்னாள் கோவா நட்சத்திர வீரரான மானுவல் லான்ஜாரோட்டோ தற்போது ஏடிகே அணியில் உள்ளார். அவர் தற்போது கோவா அணி பயிற்சியாளர் செர்ஜியோ லோபெராவுக்கு எதிராக ஏடிகே அணியில் விளையாடுகிறார். நாளை விவேகானந்த யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் முதன்முறையாக ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது இருவரும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

கடந்த சீசனில் லோபராவின் எஃப்சி கோவா அணியில் லன்சரோட் ஒரு முக்கிய வீரராக இருந்தார். 19 ஆட்டங்களில் 13 கோல்களை அடித்து அசத்தினார். ஆனால் 34 வயதான லன்சரோட் தற்போது கோவா அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு ஏடிகே அணியில் இணைந்துள்ளார்.

அதே நேரத்தில் லன்சரோட் அளவுக்கு அனுபவ அறிவைப் பெற்ற ஃபெரான் கொராமினாஸ் கோவா அணியில் 8 கோல்கள் அடித்து மிக பலம் வாய்ந்தவராக உள்ளார்.

பல அணிகள் ஃபெரான் கொராமினாசை தங்களுக்கு வேண்டும் என போட்டி போட்ட போதும் அவர் எங்கள் அணிக்கு கிடைத்திருப்பது எங்களது அதிர்ஷ்டம் என்கிறார் கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபெரா. கடந்த வாரம் பெங்களூரு அணிக்கு எதிராக சொதப்பலான் ஆட்டத்தைப் போல் இனி இருக்ககூடாது என்கிறார் செர்ஜியோ.

கோவா அணியின் எடு பேடியா அணியின் முக்கிய வீரராக உள்ளார். இதே போல் ஹூகோ பவ்மொஸ் மிகச் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தினார். தடுப்பாட்டத்தில் மிகச் சிறந்தவர்களாக உள்ள ஏடிகே அணியின் ஜான் ஜான்சன் மற்றும் ஆண்ட்ரே பைக் ஆகியோரை எதிர்த்து கோவா அணி நாளை விளையாடவுள்ளது.

ISL 2018 - ATK vs FC Goa match preview

கோவா அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளை இழந்துள்ள நிலையில் நாளை அவர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது என்கிறார் ஏடிகே அணியின் பயிற்சியாளர் கோப்பல்.

நாளை லன்சரோட் வெற்றிப் புன்னகை சிந்துவாரா? அல்லது லோபிரா அணி ஜெயிக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, November 28, 2018, 13:31 [IST]
Other articles published on Nov 28, 2018
English summary
ISL 2018 - ATK vs FC Goa match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+