Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட போங்கப்பா!! ஒரு கோல் அடிக்காமல் முடிந்த கொல்கத்தா- கோவா போட்டி

கொல்கத்தா: கொல்கத்தாவில் நவம்பர் 28 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி 0 - 0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 42 ஆவது கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் ஏடிகே அணிக்கும், எஃப்சி கோவா அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது.

ISL 2018 - ATK vs FC Goa match Report and Result

டாஸ் வென்ற கோவா அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின. ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு கோல் அடிக்க சரியான வாய்ப்பு கிடைத்தது. அது நழுவிப்போனது.

இதையடுத்து ஆட்டத்தின் 32 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் புரோனே ஹால்டருக்கும் ஆண்ரே பிக்கிக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 40 நிமிடங்களுக்கு மேலாக இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பதால் அவர்கள் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

ISL 2018 - ATK vs FC Goa match Report and Result

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 4 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டத்தின் முதல் பாதி வரை 0 - 0 என் கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

ISL 2018 - ATK vs FC Goa match Report and Result

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஜாக்கி சந்த் வெளியேற்றப்பட்டு மன்வீர்சிங் களம் இறங்கினார்.

ISL 2018 - ATK vs FC Goa match Report and Result

இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த 5 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கொல்கத்தா - கோவா இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

(Photos Courtesy - ISL)

Story first published: Thursday, November 29, 2018, 11:50 [IST]
Other articles published on Nov 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+