For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புனே அணியை வெற்றி கொள்வதே ஏடிகே கொல்கத்தா அணியின் லட்சியம்!!

கொல்கத்தா : கொல்கத்தா விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புனே அணியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஏடிகே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பல் தெரிவித்துள்ளார்.

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் புனே அணி ஒரு மோசமான நிலையில் உள்ளது. 2 புள்ளிகளை மட்டுமே எடுத்து வெற்றி அட்டவணையில் கடைசியில் உள்ளது. இது வரை வெற்றியை ருசிக்காத அந்த அணியின் இடைக்கால பயிற்சியாளர் பிரதியும் ரெட்டிக்கு, மற்றொரு சவால் காத்திருக்கிறது. டிகோ கார்லஸ் மற்றும் மார்சிலோன் ஆகிய முக்கிய வீரர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் மார்கோ ஸ்டேன்கோவிக் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

ISL 2018 - ATK vs FC Pune city Indian Super League match preview

அதே நேரத்தில் நாங்கள் மூன்று புள்ளிகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மிகச் சிறப்பாக விளையாடி நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் சொல்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ரெட்டி.

ஆனால் ஏடிகே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பல் இதை அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. டிகோ கார்லஸ் மற்றும் மார்சிலோன் ஆகிய வீரர்கள் ஆபத்தானவர்கள். ஆனால் அவர்கள் இந்த ஆட்டத்தில் இல்லை. இது எங்களுக்கு சாதகமாக இருந்தாலும் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம் என்கிறார் ஸ்டீவ் காப்பல். ஏடிகே அணியின் முக்கிய ஆட்டக்காரரான காலு உச்சே, கிறிஸ்துமஸ் வரை விளையாட மாட்டார் என்பது எங்களுக்கு பின்னடைவு என்கிறார் அவர்.

ISL 2018 - ATK vs FC Pune city Indian Super League match preview

ஏடிகே அணி ஆறு ஆட்டங்களில் விளையாடி 2 ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி அட்டவணையில் 7 ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் புனே அணி கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது, அந்த அணி வீரர்களும் தடுப்பாட்டத்தில் சிறந்தவர்கள், எனவே அந்த அணியை வெற்றி கொள்வது என்பது சற்று சிரமம் என்கிறார் கோப்பல்.

ISL 2018 - ATK vs FC Pune city Indian Super League match preview

சென்னை அணிக்கு எதிராக விளையாடும் போது முதல் பாதி ஆட்டத்தில் புனே அணி சிறப்பாக விளையாடியது. எனவே புனேஅணியை எதிர்த்து கொல்கத்தா அணி சற்று வலுவாக விளையாட வேண்டும்.

ISL 2018 - ATK vs FC Pune city Indian Super League match preview

கொல்கத்தா அணியின் இளம் வீரரான கோமல் தக்கல் கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை அளித்தார். எனவே அவரது விளையாட்டு இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தனது சொந்த மண்ணில் புனே அணியை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என உறுதியுடன் உள்ளது ஏடிகே அணி. இதே போல் புனே அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, November 9, 2018, 19:46 [IST]
Other articles published on Nov 9, 2018
English summary
ISL 2018 - ATK vs FC Pune city Indian Super League match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+