தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெறுமா? புதிய சாதனையை நோக்கி மும்பை அணி
மும்பை : ஐஎஸ்எல் தொடரில் முதல் முறையாக தொடர்ந்து 4 போட்டிகளில் வெல்லும் சாதனையை மும்பை எஃப்ஸி அணி எதிர்நோக்கி உள்ளது.
நடப்பு ஹீரோ ஐஎஸ்எல் தொடரில் கடந்த 3 போட்டிகளிலும் வென்ற மும்பை எஃப்சி அணி அடுத்து முன்னாள் சாம்பியன் ஏடிகே-வை எதிர்கொள்கிறது. மும்பை ஃபுட்பால் அரீனாவில் இப்போட்டி சனிக்கிழமை நடக்கிறது.

கடந்த 4 போட்டிகளிலும் ஜார்ஜ் கோஸ்டாவின் மும்பை அணி எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுத்தராமல் வென்றுள்ளது. இது ஏடிகே-வுக்கு நிச்சயம் கவலை தரக்கூடும். இவர்கள் இதுவரை 8 கோல்களை விட்டுத்தந்துள்ளனர். இதில் கோவாவிடம் மட்டும் 5 கோல்களை விட்டுத்தந்துள்ளனர்.

சில நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கும். பல நேரங்களில் அது இருக்காது' என்கிறார் பயிற்சியாளர் கோஸ்டா. புள்ளிகள் பட்டியலில் மும்பை, ஏடிகே இரு அணிகளும் சம அளவில் கோல்கள் அடித்துள்ளதும் சம அளவில் கோல்கள் விட்டுத்தந்துள்ளதும் தெரிய வருகிறது. ஆனால், ஏடிகே-வை விட மும்பை 3 புள்ளிகளை அதிகம் பெற்றுள்ளது.

"ஏடிகே மிகமிக சிறந்த அணி. அதில் அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த வீரர்கள் உள்ளனர். எனவே இந்த போட்டி எளிதாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. இந்த தொடரில் அவர்களின் நிலை நன்றாக இல்லைதான். என்றாலும் அவர்களை குறைத்து மதிப்பிடாமல் மிக கவனமாக இருப்பேன்" என்கிறார் மும்பை எஃப்சி பயிற்சியாளர் கோஸ்டா.

ஏடிகே அணி கடைசியாக ஆடிய போட்டியில் எஃப்சி புனேவிடம் ஒரு கோல் போட்டு ஜெயித்திருந்தது. "ஏடிகே அணி வலுவானது. கோவாவிடம் அவர்கள் சற்று திணறினாலும் அவர்கள் சிறத்த அணிதான். அவர்கள் எங்களுக்கு சவாலாக இருப்பார்கள்" என்கிறார் காப்பல்.

கெர்சன் வியரா தொடர்ந்து நடுக்களத்தில் ஆட உள்ளார். ஆந்த்ரே பிக்கியும் ஜான் ஜான்சனும் சென்டர் பேக் ஜோடியாக இருப்பார்கள். வலது புறம் ஆடும் கோமல் தட்டால் மும்பைக்கு கவலை தருவார். பிரணாய் ஹால்தார், எவர்டன் சான்டோஸ் ஆகியோர் கோல்கத்தா கிளப்புக காக நன்றாக ஆடியுள்ளனர். துடிப்பான இரு பயிற்சியாளர்களுக்கு இடையிலான இப்போட்டி நிச்சயம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது
(Photos Courtesy - ISL)


Click it and Unblock the Notifications