பெங்களூரு : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் பெங்களூரு அணியின் இரட்டையர்களான சுனில் ஷட்டரி - மிக்குவைப் போன்று கால்பந்தை வேட்டையாடும் திறமையான வீரர்கள் வேறு எந்த அணியிலும் இல்லை என்றே சொல்லாம்.
பெங்களூரு எஃப்சி அணி கடந்த சீசனில் 24 கோல்களை அடித்தது. அதில் வெனிசூலா வீரரான மிக்கு 14 கோல்களையும், கேப்டன் சுனில் ஷட்டரி 10 கோல்களையும் அடித்தார். இந்த சீசனிலும் பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுவும் பெங்களூரு அணி அடித்த 10 கோல்களில் இந்த ஜோடி 7 கோல்களை அடித்துள்ளனர்.

பயிற்சியாளர் கார்லஸ் கேட்ரெட் தலைமையிலான இந்த அணி தற்போது பலம் வாய்ந்த ஒரு அணியாகவே கருதப்படுகிறது. இந்த இரட்டையர்கள்தான் பெங்களூரு எஃப்சி அணியின் எதிர்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர்..
மிக்குவுக்கும், ஷட்டரிக்கு இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக உள்ளது. மிக்கு மைதானத்தின் நடுவில் இருந்தும் ஷட்டரி வலது புறமிருந்தும் ஆடும் ஆட்டம் அவர்கள் எதிரிகளை மிரள வைக்கிறது. இவர்கள் திறமை மிக்க ஆட்டம் இலகுவாக பந்தை கொண்டு செல்ல உதவுகிறது.
உடல்மொழி ரீதியாக எங்களுக்குள் இருக்கும் புரிதல், பந்தை கொண்டு செல்ல உதவுகிறது என்றும் கடந்த சீசனில் இது நன்றாக ஒர்க்அவுட் ஆனது என்றும் மிக்கு தெரிவித்தார், இதை இந்த சீசனிலும் நாங்கள் தொடர்கிறோம் என்றார்.

மிக்கு ஒரு தரமான விளையாட்டு வீரர். களத்தில் இறங்கிவிட்டால் அவர் அருமையாக ஆடும் ஸ்டைலே தனி என்றும் அவரால் எங்கள் அணி பல நன்மைகளை பெற்றிருக்கிறது என்றும் அவரை பாராட்டுகிறார் பெங்களூரு அணி கேப்டன் சுனில் ஷட்டரி.
சுனில் மற்றும் மிக்கு ஆகிய இருவருமே சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடுபவர்கள். இவர்கள் இருவரும் கோல் போஸ்ட்டை குறி வைத்துத்தான் விளையாடுகிறார்கள். ஏடிகே அணியுடன் விளையாடும்போது 2 - 1 என்ற கோல் கணக்கில் வென்றதை உதாரணமாக சொல்லாம்.
அந்த ஆட்டத்தில் ஏடிகே அணி தடுப்பாட்டத்தை கையில் எடுத்து சிறப்பாக விளையாடியது. ஆனால் மிக்கு இரண்டாம் பாதியில் திறமையாக விளையாடி பெங்களுரு அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஷட்டரி காயமடைந்தார். 2 வார ஓய்வுக்குப் பிறகு தற்போது அவர் குணடைந்துள்ளார்.
ஆனால் ஷட்டரி சனிக்கிழமையன்று ஜோர்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் சர்வதேச போட்டியில் விளையாவுள்ளார். இதனால் எஃப்சி கோவா அணியுடன் விளையாடும்போது ஷட்டரி பூரண குணடைந்துவிடுவரா என்ற பயம் உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை எற்பட்டால் பெங்களூரு அணியின் மிக்கு அனைத்து பாரங்களையும் தனது தோளில் சுமந்து விளையாடுவாரா? அவரது ஜோடியை இழப்பாரா? ரசிகர்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
(Photos Courtesy - ISL)