Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வின்னா என்னன்னே தெரியாத பெங்களூருவை சந்திக்கும் டெல்லி டைனமொஸ் அணி.. என்ன ஆகப் போகுதோ?

பெங்களூரு : பெங்களூரு எஃப்சி அணிக்காக சுனில் சேத்ரி ஆடும் 150வது போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் பெங்களூரு எஃப்சி - டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணியின் அடையாள சின்னமாக திகழ்கிறார் அதன் கேப்டன் சுனில் சேத்ரி. பெங்களூருவின் வெற்றிக்கு எப்போதும் இவர் துணை நிற்கிறார். கோவாவிற்கு எதிரான அண்மை போட்டியில் கூட சேத்ரி அணிக்கு வெற்றி பெற்றுதந்தார்.

ISL 2018 - Bengaluru FC vs Delhi Dynamos match no. 40 preview

நாளை நடைபெறும் ஆட்டம் 2வது இடத்தில் உள்ள அணிக்கும் கடைசி இடத்தில் உள்ள அணிக்கும் இடையிலானது. வலுவான பெங்களூரு அணியை சமாளிப்பது டெல்லிக்கு கடினமான பணியாகவே இருக்கும்.

பெங்களூரு அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. கோவாவுக்கு எதிரான கடந்த போட்டியில் நடுக்கள வீரர் டிமாஸ் டெல்கேடோ வெளியேற்றப்பட்டதால் அவருக்கு பதில் சிஸ்கோ ஹெர்ணான்டஸ் வர வாய்ப்புள்ளது.

ISL 2018 - Bengaluru FC vs Delhi Dynamos match no. 40 preview

நட்சத்திர வீரர்கள் ஆன மிக்கு, எரிக் பார்த்தலுவுக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டிருந்ததால் அவர்கள் ஆடவில்லை. இதில் பார்த்தலுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அவர் அடுத்த சில போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை. காயம் குணமாகியிருந்தால் மிக்கு களமிறங்குவார். இவர் வராவிட்டால் செஞ்சோ கில்ஸ்தன் களமிறங்குவார்.

ISL 2018 - Bengaluru FC vs Delhi Dynamos match no. 40 preview

மறுமுனையில் டெல்லி இத்தொடரில் திணறி வருகிறது. 8 போட்டியில் 7 கோல் மட்டுமே அடித்துள்ளது. நேர்த்தியான ஆட்டம் இல்லாததால் இந்த அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

ஆனால் தங்கள் வீரர்கள் போதிய ஓய்வு எடுத்துள்ளதால் அடுத்து வரும் போட்டிகளில் நன்கு ஆடுவார்கள் என நம்புகிறார் டெல்லி பயிற்சியாளர் கோம்பவ்.

ISL 2018 - Bengaluru FC vs Delhi Dynamos match no. 40 preview

டெல்லி அணியில் பிரிதம் கோத்தல், நாராயண் தாஸ் தற்காப்பை முன்னெடுக்கின்றனர். பெங்களூருவுக்கு எதிராக வாய்ப்பு தந்தால் கலக்க காத்திருக்கிறார் டேனியல் லாலிம்புயா. இவர் இதுவரை 5 நிமிடம் மட்டுமே ஆடியுள்ளார். டெல்லிக்கு எதிராக வெற்றி பெற்று தனது வலிமையை பெங்களூரு நிரூபிக்குமா நாளை முடிவு தெரியும்

(Photos Courtesy - ISL)

Story first published: Sunday, November 25, 2018, 18:38 [IST]
Other articles published on Nov 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+