For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடைசி நிமிடங்களில் கோல் அடித்த பெங்களூரு.. புனே அணியை வீழ்த்தியது

பெங்களூரு : பெங்களூருவில் நவம்பர் 30 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 44 ஆவது கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா மைதானத்தில் பெங்களூரு எஃப்சி அணிக்கும், எஃப்சி புனே சிட்டி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற புனே சிட்டி அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - Bengaluru FC vs FC Pune City match no.44 result

ஆட்டம் தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. 11 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் உதாந்தா சிங் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் புனே சிட்டி அணியின் ராகுல் பெக்கே ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் புனே சிட்டி அணியில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு அணிகளுமே கோல் அடிக்க முயற்சி செய்தன.

ISL 2018 - Bengaluru FC vs FC Pune City match no.44 result

இறுதியில் கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்தில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதியில் 1 - 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சென்சோ மாற்றப்பட்டு செம்போய் களம் இறங்கினார்.

ISL 2018 - Bengaluru FC vs FC Pune City match no.44 result

இதே போல் ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் புனே சிட்டி அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 88 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராகுல் பெக்கே அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 90 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்சிலோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2018 - Bengaluru FC vs FC Pune City match no.44 result

இதைத் தொடர்ந்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 5 நிமிடத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 2 - 1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, December 1, 2018, 11:15 [IST]
Other articles published on Dec 1, 2018
English summary
In the 44th match of ISL 2018, Bengaluru FC and FC Pune City are going to clash. Will Pune win this match?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+