Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல் 2018 : டாப் 2 அணிகள் மும்பை - பெங்களூரு மோதிய போட்டி டிரா

பெங்களூரு : மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே பெங்களூருவில் டிசம்பர் 9 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 53 ஆவது கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் பெங்களூரு எஃப்சி அணிக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை சிட்டி அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - Bengaluru FC vs Mumbai City FC match ends in a draw

தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடின. ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செனாஜ்சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கபட்டது.

ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் உதாந்தா சிங் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2018 - Bengaluru FC vs Mumbai City FC match ends in a draw

இதையடுத்து ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் மொடுகு சோகு ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.

இதையடுத்து பெங்களூரூ மற்றும் மும்பை சிட்டி அணிகளுக்கிடையான ஆட்டம் முதல் பாதியில் 1- 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் செனாஜ் சிங்கிற்கு இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2018 - Bengaluru FC vs Mumbai City FC match ends in a draw

59 மற்றும் 61 ஆவது நிமிடங்களில் பெங்களூரு அணியின் ஹர்மோந்த் மற்றும் ராகுல் ஆகியோருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

85 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடுகு சோகு மற்றும் 87 ஆவது நிமிடத்தில் அதே அணியின் ரஃபேல் ஆகியோருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2018 - Bengaluru FC vs Mumbai City FC match ends in a draw

90 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த 5 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்குகிடையேயான ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

(Photos Courtesy - ISL)

Story first published: Monday, December 10, 2018, 10:32 [IST]
Other articles published on Dec 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+