For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாரும் ஜெயிக்கிறாங்க.. நம்ம எப்ப தான் ஜெயிக்கிறது? சென்னையின் எஃப்சி சோகம்

சென்னை : சென்னையில் நேற்று (அக்டோபர் 3) நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 27 ஆவது கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும், இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி இடதுபுறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - Chenaiyin FC vs Mumbai City FC match result

தொடக்கம் முதல் ஆட்டத்தை சென்னை அணி வீரர்கள் தங்கள் கையில் வைத்திருந்தனர். இதையடுத்து மும்பை அணியும் நன்றாக விளையாடத் தொடங்கியது. இரு அணி வீரர்களும் தங்களது இலக்கை நோக்கி விடிளயாடினர்.

ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடுகு சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டம் சென்னையில் நடப்பதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.

ISL 2018 - Chenaiyin FC vs Mumbai City FC match result

ஆனால் சென்னை அணி வீரர்கள் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சரியாக விளையாடவில்லை. இதையடுத்து மும்பை அணியை சமன் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த சென்னை அணி கடுமையாக விளையாடியது.

இறுதியில் 2 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. ஆனால் அந்த கடைசி நிமிடங்களில் எந்த அணியும் கோல் அடிக்கவிலை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி முன்னிலை பெற்றுள்ளது.

ISL 2018 - Chenaiyin FC vs Mumbai City FC match result

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் முன்பைவிட விறுவிறுப்பாக இருந்தது. இதையடுத்து ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஐசக் மற்றும் ஆண்ரியா ஆகியோர் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜெர்மன் பிரீத் சிங்கும், கிரிகோரியும் களம் இறங்கினர்.

66 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மிலன் சிங் வெளியேற்றப்பட்டு சஞ்சு பிரதான் களம் இறக்கப்பட்டார். 72 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் லூசியனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 76 மற்றும் 78 ஆவது நிமிடங்களில் சென்னை மற்றும் மும்பை அணிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 89 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொகமது ரஃபீக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த கடைசி நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து மும்பை அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Sunday, November 4, 2018, 10:32 [IST]
Other articles published on Nov 4, 2018
English summary
ISL 2018 - Chenaiyin FC vs Mumbai City FC match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+