For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சீசனில் அம்போவான சென்னை மச்சான்ஸ்.. லீக் சுற்றோடு வெளியேறும் விளிம்பில் சென்னை

சென்னை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் கடந்த சீசனின் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி தற்போது ஒரு அசாதாரணமான சரிவின் விளிம்பில் உள்ளது.

ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி இது வரை மீண்டும் அதை தக்க வைத்துக் கொண்டதில்லை. ஆனால் ஒவ்வொரு அணிக்கும் சாம்பியன் ஆக வேண்டும் எனற கனவு இருந்து வருகிறது. சென்னை அணி இது வரை 9 ஆட்டங்களில் ஆடி 5 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. தற்போது அந்த அணி புள்ளி அட்டவணையில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை அணி ஏடிகே அணியுடன் மோதுகிறது.

ISL 2018 - Chennayin FC vs ATK match no. 46 preview

சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அனைத்து வகைகளிலும் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளார். சென்னை அணி தனது சொந்த மண்ணில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் ஐஎஸ்எல் போட்டிகளில் இருந்து அந்த அணி வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, எங்கள் அணியினர் மிக நன்றாக விளையாடக் கூடியவர்கள்தான். அவர்களிடம் மிகுந்த தன்னம்பிக்கை உள்ளது.

ISL 2018 - Chennayin FC vs ATK match no. 46 preview

கேரளா அணிக்கு எதிராக விளையாடும்போது எங்கள் வீரர்கள் தங்கள் திறமையக் காட்டினர். அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.

ஆனால் அந்த இங்கிலாந்து பயிற்சியாளரின் கவலை எல்லாம், கடந்த வியாழக்கிழமை கேரளாவுக்கு எதிராக விளையாடும்போது, கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் அதை அவர்கள் பயன்படுத்தாமல் விட்டு விட்டதுதான் என்கிறார்.

ISL 2018 - Chennayin FC vs ATK match no. 46 preview

ஸ்டீவ் காப்பல் அணிக்கு எதிராக விளையாடுவது என்பது உண்மையிலேயே மிகவும் கடினம்தான். கடந்த சீசனில் அவர்களுடன் 2 ஆட்டங்களில் விளையாடி மூன்று கோல்களை அடித்துள்ளளோம். அதில் ஒன்று பெனால்டி மூலம் கிடைத்தது. தற்போது ஆண்ட்ரே பிக்கி போன்ற சிறந்த வீரர்களுக்கு எதிராக தடுப்பாட்டத்தை ஆடுவது சற்று கடினம்தான் என்கிறார் ஜான் கிரிகோரி.

ஸ்டீவ் காப்பலின் ஏடிகே சிறந்த அணிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் அந்த அணி கோவாவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆண்ட்ரே பிக்கி மற்றும் ஜான் ஜான்சன் ஆகியோரின் அனுபவங்கள் ஏடிகே அணிக்கு மிக முக்கியம் வாய்ந்தவை. ஆனால் அந்த அணியின் பிரன்யே ஹேல்டர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏடிகே அணிக்கு ஒரு இழப்பாகவே கருதப்படுகிறது.

அதே நேரத்தில் அந்த அணி சீசன் இடைவேளைக்குப் பிறகு ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது காப்பலின் வருத்தமாக உள்ளது.

இன்னும் அதிக போட்டிகளில் விளையாடி அதிக கோல்கள் அடித்து அதிக புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதே அந்த அணியின் லட்சியம் என்கிறார் காப்பல். காலு உச்சே, எலிமினோ அல்ஃபெரோ ஆகியோர் தற்போது அணியில் இல்லை. அல்ஃபெரோ இது வரை எங்கள் அணிக்காக ஒரு கோல் கூட போடவில்லை. ஆனால் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் என்கிறரார் காப்பல்.

இடைவேளைக்கு முன்பு ஒவ்வொரு அணிக்கும் இந்த ஆட்டங்கள் மிகுந்த சவாலாக இருந்தது. இந்த வார இறுதி என்பது கிரிகோரி மற்றும் காப்பல் இருவருக்குமே கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையிலேயே உள்ளனர். இல்லையென்றால் அவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதே உண்மை.

(Photos Courtesy - ISL)

Story first published: Sunday, December 2, 2018, 12:51 [IST]
Other articles published on Dec 2, 2018
English summary
Here is the Chennayin FC vs ATK match preview in ISL 2018.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+