Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல் 2018-19: கடைசி இடத்தை பிடிக்கப் போறது யாரு? சென்னை - டெல்லி மோதல்

சென்னை : மெரீனா - அரினா எனப்படும் சென்னையின் எஃப்சி மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகள் சென்னையில் டிசம்பர் 14 அன்று நடைபெறும் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றன.

பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்த இரு அணிகளும் இந்த சீசனில் 9 மற்றும் 10 என அட்டவணையில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக அவர்கள் நம்பிக்கையுடன் விளையாட உள்ளனர். மூன்று புள்ளிகளைப் எடுப்பதே அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

ISL 2018 - Chennayin FC vs Delhi Dynamos FC match 58 preview

மிக முக்கியமாக, ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வாய்ப்புகளை கோல்களாக மாற்றுவதில் இந்த இரு அணிகளும் மிகவும் மோசமாகவே உள்ளன. சென்னை அணியின் ஜெஜே லல்பேகுளோ மற்றும் கார்லோஸ் சலோம் ஆகியோர் தலா ஒரு கோல்களை மட்டுமே அடித்துள்ளனர். இதே போல் டெல்லி டைனமோஸ் அணியின் ஸ்ட்ரைக்கர் ஆண்ட்ரிஜியா கலுடெரோவிக்கும் ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார்.

டெல்லி டைனமோஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு வருவது பெரிய சவாலாக இருக்கும். கால்பந்து ஆட்டங்களில் அவர்கள் மிக நன்றாக விளையாடினாலும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர். அதே போல் தான் எங்கள் அணியும் நிறைய வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர் என்கிறார் சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி.

ISL 2018 - Chennayin FC vs Delhi Dynamos FC match 58 preview

இதில் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இரு அணிகளின் பயிற்சியாளர்களுமே தலா 19 மற்றும் 20 வீரர்களை வைத்து விளையாடியும் அவர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கவில்லை.

கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி தொடக்கத்திலேயே இதை இழந்துவிடும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த அணி சிறந்த வெற்றியைப் பெறவில்லை.

ஐஎஸ்எல் சீசனில் யாரும் மீண்டும் அந்த டைட்டிலை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்காதது தனக்கு வியப்பளிப்பதாக கிரிகோரி தெரிவித்தார். இந்த சீசனில் இப்படி ஒரு முடிவு வரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் அந்த பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் அணிகளுக்குக் கூட வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இல்லை என்கிறார் கிரிகோரி.

ISL 2018 - Chennayin FC vs Delhi Dynamos FC match 58 preview

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கு முன்னே தனது ஸ்கோரைத் கனிணி திரையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஜெஜே லால்பேஹுவா உள்ளார்.

மறுமுனையில் டெல்லி டைனமோல் அணியும் வெற்றி பெற வேண்டும் என்ற உற்சாகத்தில் உள்ளது. ஆனால் சிறப்பாக விளையாட்டை வெளிப்படுத்தும் சிங்கம் போன்ற ஆட்டத்தை இந்த சீசனில் டெல்லி அணி விளையாடவில்லை. கடந்த மூன்று போட்டிகளில், அவர்கள் ஆட்டத்தில் இலக்குகளை அடையவில்லை.

நாங்கள் நன்றாக கால்பந்து விளையாடுகிறோம். நாம் நிறைய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம் மற்றும் அதிகமான புள்ளிகள் பெறவில்லை என்கிறார் டெல்லி பயிற்சியாளர் ஜோசப் கோம்போவ்.

நாங்கள் விளையாடும்போது கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம், ஆனால் ஏமாற்றுவதில்லை. இந்த ஆண்டின் கடைசி ஆட்டத்தில் வென்ற மனநிலையுடன் நாங்கள் செல்வோம் என கூறுகிறார் ஜோசப் கோம்போவ்.

ISL 2018 - Chennayin FC vs Delhi Dynamos FC match 58 preview

அதே நேரத்தில் காயமடைந்த ஆட்ரியா, நாராயண் தாஸ் ஆகியோரின் சேவைகளை டெல்லி அணி இழக்கிறது. மேலும் லல்லியன்ஸுலாலா ஷங்க்டே, ரோமியோ ஃபெர்னாண்டஸ் மற்றும் நந்தகுமார் செக்கர் ஆகியோர் இந்த சீசனில் முறையாக விளையாடவில்லை என்கிறார் ஜோசப் கோம்போவ்.

சென்னையின் எஃசி அணி தங்கள் சொந்த மண்ணில் வெற்றி பெறுவார்களா ? அல்லது டெல்லி அணி இறுதியாக தங்களது ஏமாற்றத்தை வெல்லுமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, December 15, 2018, 13:35 [IST]
Other articles published on Dec 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+