Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த மண்ணில் ஆடும் கேரளா பிலாஸ்டர்ஸ்.. டெல்லி சமாளிக்குமா?

திருவனந்தபுரம் : இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் ஒரு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த கேரள பிளாஸ்டர்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் கொச்சி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமை டெல்லி டைனமோஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

கேரள அணி இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை சென்ற ஏடிகே அணியை கேரள பிளாஸ்டர்ஸ் அணி சொந்த மண்ணில் வென்றுள்ளது.

இதே போல் மும்பை சிட்டி அணியுடன் விளையாடும்போது கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து கேரள அணி வெற்றி பெற்றது.

டெல்லி அணி ஆபத்தானது?

டெல்லி அணி ஆபத்தானது?

டெல்லி டைனமோஸ் அணியை குறித்து கருத்துத் தெரிவித்த கேரள அணியின் மேலாளர் டேவிட் ஜேம்ஸ், "அந்த அணி ஒரு சுவாரஸ்யம் மிகுந்தது. அதில் உள்ள அனைத்து வீரர்களும் இளமையானவர்கள். திறமை மிகுந்த அந்த வீரர்கள் சில நேரங்களில் ஆபத்தானவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்" என கூறினார்.

டெல்லியின் முக்கிய வீரர்கள்

டெல்லியின் முக்கிய வீரர்கள்

முன்னாள் இந்தியன் கோல் கீப்பர் தீரஜ் சிங், தற்போது மீண்டும் மிரட்ட வருகிறார். சந்தேஷ் ஜிங்நன் மற்றும் நெமஞ்சா லகிக்-பெசிக் ஆகியோர் தடுப்பாட்டத்தில் பெரும் பங்கு வகிப்பார்கள். மேலும், முகம்மது ரக்கிப் மற்றும் லுரரூத்ரா ஆகியோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளது டெல்லி அணிக்கு ஒரு கடுமையான சவாலாக இருக்கும். அதே நேரத்தில் டெல்லி டைனமோஸ் அணியின் உதவி பயிற்சியாளர் மிருதுல் பானர்ஜி கேரளாவின் தற்காப்பு வலிமையையும் கவனத்தில் கொண்டுள்ளார்.

வலுவான கேரளா

வலுவான கேரளா

கேரள பிளாஸ்டர்ஸ் அணி வீரர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்களில் சிலருக்கு நான் பயிற்சி அளித்துள்ளேன். கடந்த இரண்டு போட்டிகளில் அவர்கள் மிக நன்றாக விளையாடினர். மேலும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வீரர்களுக்கு ஒரு வலுவான பாதுகாப்பு உள்ளது. அது கடுமையானதாக இருக்கும் என்றாலும் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறுகிறார் மிருதுல் பானர்ஜி.

டெல்லி என்ன செய்யப் போகிறது?

டெல்லி என்ன செய்யப் போகிறது?

புதிய பயிற்சியாளர் ஜோசப் கோம்போவின் கீழ், டெல்லி டைனமோஸ் அணி இந்த ஐஎஸ்எல் போட்டிகளின் 5 ஆவது சீசனின் தொடக்க ஆட்டத்தில் இரண்டு போட்டிகளில் பங்கேற்றனர். அதில் ஒரு புள்ளியைப் பெற்று அவர்கள் வெற்றியை ருசித்துள்ளனர். இதே போல் புனே சிட்டிக்கு எதிராக விளையாடிய டெல்லி அணி டெல்லோ கார்லோஸ் ஒரு கோல் அடித்ததால் வெற்றியைத் தக்கவைத்தது. இதனிடையே தாமதமாக கோல் அடிக்க முயற்சி செய்யும் சிக்கல் எங்கள் அணியில் உள்ளது, ஆனால் இந்த முறை அந்த சிக்கலை தீர்க்க நாங்கள் தீவிரமாக முயற்சி செய்கிறோம். தற்போது நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள பயிற்சி முடிந்தவரை எங்கள் இலக்குகளை அடைவோம் என்கிறார் பானர்ஜி.

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

கேரளா அணி ஏற்கனவே பெற்ற வெற்றியைப் போல தற்போது வெற்றிக் கனியை ருசிக்க துடிக்கிறது. ஆனால் ஜோசப் கோம்போ தலைமையின் கீழ் உள்ள டெல்லி அணி வீரர்கள், கேரள அணியின் வெற்றியை தடுக்க போராடுவார்கள். நாளை எந்த அணிக்காக பட்டாசுகள் வெடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Saturday, October 20, 2018, 13:27 [IST]
Other articles published on Oct 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+