For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

3 கோல்கள் அடிக்கத் தயாராகும் ஜாம்ஷெட்பூர் அணி.. டெல்லி டைனமோஸ் சமாளிக்குமா?

டெல்லி : டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூர் அணியை நேருக்கு நேர் சந்திக்க டெல்லி டைனமோஸ் அணி தயாராக உள்ளது.

இந்த டெல்லி சிங்கங்கள் இது வரை ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று டிராக்களை பெற்றும் பல தோல்விகளை சந்தித்தும் உள்ளதால் நாளை சொந்த மண்ணில் நடைபெறவுள்ள போட்டியில் கண்டிப்பாக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என உறுதியாக உள்ளார் அதன் பயிற்சியாளர் ஜோசப் கோம்போவ்.

ISL 2018 - Delhi Dynamos vs Jamshedpur FC match preview

இன்னும் பல போட்டிகள் இருக்கும் நிலையில் முதல் நான்கு இடங்களுக்குள் வர வேண்டும் என நாங்கள் போராடுகிறோம். எங்கள் அணி பல்வேறு விதமான வீரர்களைக் கொண்டது. அதற்கு நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்கிறார் கோம்போவ்.

கடந்த போட்டியில் வயிற்றுப் போக்கு காரணமாக களம் இறங்காமல் இருந்த ரனே மிலலிக் மற்றும் ஆட்ரியா கார்மோனா ஆகிய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சியாளர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

ISL 2018 - Delhi Dynamos vs Jamshedpur FC match preview

கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ஜாம்ஷெட்பூர் அணியின் விளையாட்டு பிரமாதமாக இருந்தது. அவர்கள் கோவா அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் தோற்க்கடித்தனர்.

ஜாம்ஷெட்பூர் அணி ஒரு சிறந்த அணி என்பதில் சந்தேகம் இல்லை, ஏனென்றால் கோவா அணியை அது இலகுவாக வென்றது. ஆரம்பம் முதலே அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது, ஆனாலும் நாங்கள் மூன்று கோல்கள் அடித்து ஜாம்ஷெட்பூர் அணியை வெல்வோம் என்கிறார் கோம்போவ்.

ISL 2018 - Delhi Dynamos vs Jamshedpur FC match preview

ஜாம்ஷெட்பூர் அணியைப் பொறுத்தவரை அந்த அணி கோவா அணியை வென்றதன் மூலம் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. அந்த அணியின் பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ தனது அணி வேகமாக பல சாதனைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். எங்கள் அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

சில நேரம் நன்றாகவும், சில நேரம் மோசமாகவும் எங்கள் அணி வீரர்கள் விளையாடி வருவதால் அவர்களை ஊக்குவிக்கும் கடமை எனக்கு உள்ளது என்கிறார் சீசர் ஃபெராண்டோ.

ISL 2018 - Delhi Dynamos vs Jamshedpur FC match preview

தொடர்ந்து பேசிய அவர் டெல்லி அணி ஒரு அபாயகரமான அணி. அவர்களிடம் நல்ல வீரர்களும், நல்ல பயிற்சியாளரும் உள்ளனர். அவர்களும் வெல்ல வேண்டும் என நினைப்பதால் நாளைய ஆட்டம் கடுமையானதாக இருக்கும் என சீசர் ஃபெராண்டோ தெரிவித்தார்.

மைக்கேல் சூசைராஜ் தற்போது ஒரு நல்ல ஃபார்மில் இருக்கிறார். அந்த அணிக்கு அவர் மிகச் சிறப்பானதொரு பங்கை அளித்து வருகிறார். மைக்கேல் சூசைராஜ் மூன்று கோல்களையாவது அடித்துவிட வேண்டும் என நினைக்கிறார். அதனால் டெல்லி அணி அவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஜாம்ஷெட்பூர் அணி தனது வெற்றியைத் தொடர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. மூன்று கோல்கள் அடிக்க வேண்டும் என இலக்கும் நிர்ணயித்துள்ளது. அது நடக்குமா? நாளை டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ரசிகர்கள் அதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

(Photos Courtesy - ISL)

Story first published: Sunday, November 4, 2018, 13:02 [IST]
Other articles published on Nov 4, 2018
English summary
ISL 2018 - Delhi Dynamos vs Jamshedpur FC match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+