For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலுவான நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்-ஐ சந்திக்கும் டெல்லி டைனமோஸ்.. டெல்லி வெற்றி பெறுமா?

ISL 2018 - Delhi Dynamos vs North East United FC - match preview

டெல்லி : டெல்லியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணியை எதிர்த்து களம் காண்கிறது வலிமையான நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி. இந்த போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெறுகிறது.

டெல்லி டைனமோஸ் அணி தற்போது ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணி இது வரை ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை என்றாலும், நாளை (செவ்வாய் கிழமை) டெல்லி நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி, நார்த் ஈஸ்ட் அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதில் ஸ்காட்டரி உறுதியாக உள்ளார்.

நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஸ்காட்டரி கூறுகையில், நாளை நடைபெறும் இந்த விளையாட்டு மிகவும் கடினமானதாக இருக்கும். அதே நேரத்தில் டெல்லி அணி மிகக் குறைவான புள்ளிகளை எடுத்து வெற்றி அட்டவணையில் கீழே இருப்பது தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும், நான் மட்டும் அந்த அணியில் இருந்திருந்தால் முதல் மூன்று இடங்களில் இருந்திருப்போம் என என்னால் தைரியமாக சொல்ல முடியும் .

ஸ்காட்டரி சிறப்பாக செயல்பட்டு நார்த் ஈஸ்ட் அணியை வழிநடத்திச் செல்கிறார். நான்கு போட்டிகளில் விளையாடி எட்டு புள்ளிகளை அந்த அணி பெற்றுள்ளது. இரண்டு வெற்றிகள், இரண்டு டிராக்களைப் பெற்று எஃப்சி கோவா அணிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை நார்த் ஈஸ்ட் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நார்ட் ஈஸ்ட் அணி பயிற்சியாளரின் இந்த கருத்துக்களை டெல்லி டைனமோஸ் அணியின் பயிற்சியாளர் ஜோசப் கோம்புவோ மறுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அணியின் பயிற்சியாளர் ஜோசப் கோம்புவோ இந்த சீசனில் நார்த் ஈஸ்ட் அணி இரண்டாவது இடத்தைத் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் சிறந்த நட்சத்திர வீரரான பார்தோலோம் ஓக்பேச் மற்றும் மிட்ஃபீல்டர் ஃபெடரிகோ கால்கோதான். ஆனால் நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் இந்த இரட்யைர்களை புறம் தள்ளி ஜெயிப்போம்.

டெல்லி அணியில் கொமார்ஸ்கி இல்லாததால் இலகுவாக ஜெயித்துவிடலாம் என நார்த் ஈஸ்ட் அணி நினைக்கிறது. ஆனால் அது முடியாது.

மும்பை அணிக்கு எதிராக விளையாடி நாங்கள் தோல்வி அடைந்தோம் ஆனால் 20 கோல்களை இலக்காக வைத்தோம். 6 கோல்களை அடித்த முயற்சி செய்தோம். கிட்டத்தட்ட 58 சதவீத ஆட்டத்தை நாங்கள்தான் வைத்திருந்தோம்.

ஆனால் நாங்கள் நாளை வலுவாக இருப்போம் என்றும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று ஜோசப் கோம்புவ நம்பிக்கை தெரிவித்தார். ஸ்காட்டரியின் கருத்து தவறு என்பதை நிருபிக்கும் வகையில் நாளை எங்களது ஆட்டம் இருக்கும் என்று ஜோசப் கோம்புவ தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, October 29, 2018, 19:44 [IST]
Other articles published on Oct 29, 2018
English summary
ISL 2018 - Delhi Dynamos vs North East United FC - match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+