For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் அணி வெற்றி !!

டெல்லி : டெல்லியில் நேற்று (அக்டோபர் 30) அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் 2 - 0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 23 ஆவது கால்பந்து போட்டி டெல்லி ஜவஹர்லால் நேரு டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும், நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது.

ISL 2018 - Delhi Dynamos vs North East United FC match results

டாஸ் வென்ற டெல்லி அணி இடதுபுறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே நார்த் ஈஸ்ட் அணி மிகச் சிறப்பாக விளையாடியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் டெல்லி டைனமோஸ் அணியும் சுதாரித்து பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

ஆனால் இரு அணிகளும் கோல் அடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. ஆனால் எந்த அணியும் கோல் அடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் இரு அணிகளும் தடுப்பப்பாட்டத்தை கையிலெடுத்து ஆடின.

ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் குர்விந்தர் சிங்கிற்கு பதில் லால்தங்கா களமிறக்கப்பட்டார். இறுதியில் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து டெல்லி டைனமோஸ் எஃப்சி அணியும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணியும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ரானா கிராமிக்குப் பதில் வினித் ராய் களமிறங்கினார். 58 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ராபர்ட்டுக்கு பதில் கீகன் பெரேரா களம் புகுந்தார். 59 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் மார்கோசுக்கும், 69 ஆவது நிமிடத்தில் ப்ரீத்தம் கோட்டலுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் நந்தகுமார் வெளியேற்றப்பட்டு டேனியல் களம் இறங்கினார். இதைத் தொடர்ந்து இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இரண்டு அணிகளுமே சிறப்பாக விளையாடியதால் கோல் அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ஃபெடரிகோ அற்புதமாக ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த கூடுதல் நிமிடத்திலும் நார்த் ஈஸ்ட் அணி அசத்தியது.

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்லோமி அற்புதமாக இரண்டாவது கோலை அடித்தார். இதையடுத்து நார்த் ஈஸ்ட் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, October 31, 2018, 14:29 [IST]
Other articles published on Oct 31, 2018
English summary
ISL 2018 - Delhi Dynamos vs North East United FC match results
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+