கோவா: கோவாவில் டிசம்பர் 14 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் சூப்பர் லீக் போட்டியில் கோவா அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 57 ஆவது கால்பந்து போட்டி கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா அணிக்கும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் எஃப்சி அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் கோவா அணியின் ஹீயூகோ பௌமஸ் ஒரு கோல் அடிக்க முயன்றார். ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது.
ஆட்டத்தின் 24 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ராபர்ட்டுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. 34 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரீகன் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதே போல் 43 ஆவது நிமிடத்தில் நார்தத் ஈஸ்ட் அணியின் ரவுலினுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

முதல் பாதியின் முடிவில் வழங்கப்பட்ட ஒரு நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதியில் கோவா மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 46 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ராபர்ட் வெளியேற்றப்பட்டு கீகன் பெரேரா களம் இறக்கப்பட்டார்.

இதையடுத்து ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 69 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எடு பேடியா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

71 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஹீகோ போமஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 84 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபெரான் கொராமினால் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியின் கடைசி நிமிடமான 90 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்லோமி ஒரே ஒரு ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு ஆறுதல் அளித்தார்.

ஆனால், கூடுதல் நிமிடத்தில் கோவா அணியின் மிகுல் ஒரு கோல் அடித்து கோவா அணியின் கோல் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தினார். நார்த் ஈஸ்ட் அணி படு மோசமான வகையில் ஆடியதால் தோல்வி அடைந்தது. கோவா அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)