Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோவா வீழ்த்தியது பெங்களூரு.. சுனில் ஷட்டரி, ராகுல் அபாரமாக கோல் அடித்தனர்

கோவா : கோவாவில் நவம்பர் 22 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 36 ஆவது கால்பந்து போட்டி கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா அணிக்கும், பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - FC Goa vs Bengaluru FC match result

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடியது. பெங்களூரு அணியின் சுனில் ஷட்டரி மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இதையடுத்து ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராகுல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து 36 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மொகமது அலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நிமிடங்களிலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 1 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் 47 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மொகமது அலிக்கு இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2018 - FC Goa vs Bengaluru FC match result

ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சிஸ்கோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அடுத்து ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமோசுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் எடுத்துக் கொடுக்க, பிரான்டன் ஃபெர்ணான்டஸ் கோல் அடித்து அசத்தினார்.

இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகமாகியது. அப்போது 77 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷட்டரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 85 ஆவது நிமிடத்தில் இரு அணிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2018 - FC Goa vs Bengaluru FC match result

ஆட்டத்தின் இறுதியில் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, November 23, 2018, 12:43 [IST]
Other articles published on Nov 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+