Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நிமிடங்களில் கோல் அடித்த கோவா.. டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி!!

கோவா : கோவாவில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் டெல்லி அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 31 ஆவது கால்பந்து போட்டி கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா அணிக்கும் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும் இடையே நவம்பர் 9 அன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கோவா அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - FC Goa vs Delhi Dynamos FC match result

ஆட்டம் தொடங்கியது முதல் டெல்லி அணி அருமையாக விளையாடியது. ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் பிக்ராம்ஜித் சிங் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கோவா அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர்.

இரு தரப்பினரும் சரிக்கு சரியாக விளையாடினர். ஆனால் கோவா அணியால் கோல் எதுவும் போட முடியவில்லை. பல முறை இரண்டு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தும் நழுவிப் போனது.

ISL 2018 - FC Goa vs Delhi Dynamos FC match result

இறுதியில் ஒரு நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால் கோவா அணி கோல் அடிக்காததால் ஆட்டத்தின் முதல் பாதியில் டெல்லி டைனமோஸ் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொங்கிய சிறிது நேரத்தில் அதாவது 48 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் லலியான்சுலாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எடு பேடியா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2018 - FC Goa vs Delhi Dynamos FC match result

இதனால் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 60 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. 62 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் நாராயண் தாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவா அணி வீரர்கள் ஆட்டத்தில் மிகச் சரியாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி விளையாடினார். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் லாலின்சுலா அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2018 - FC Goa vs Delhi Dynamos FC match result

இதையடுத்து கோவா அணியில் இரண்டு வீரர்கள் மாற்றப்பட்டனர். அப்போதுதான் ஓர் அதிசயம் நடந்தது. ஆம் கோவா அணியின் பிராண்டோ ஃபெர்ணான்டஸ் கோல் அடித்து சமன் செய்தார்.

இதையடுத்து ஆட்டத்தின் 82 மற்றும் 88 ஆவது நிமிடத்தில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் ஆட்டத்தின் 89 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எடு பேடியா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். அப்போது கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது யாரும் கோல் அடிக்கவில்லை

இதைத் தொடர்ந்து கோவா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, November 9, 2018, 9:21 [IST]
Other articles published on Nov 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+