கோவா : கோல்டன் பூட் விருது பெற்ற எஃப்சி கோவா அணி டிசம்பர் 13 அன்று கோவா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
கோவா அணியின் ஃபெரான் கொரோமினாஸ் இது வரை எட்டு கோல்கள் அடித்துள்ளார். இதே போல் நார்த் ஈஸ்ட் அணியின் ஸ்ட்ரைக்கர் பர்த்தோலோம் ஓக்பேச்சியும் எட்டு கோல்களை அடித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த போட்டியில் நேருக்கு நேர் களம் இறங்குகின்றனர்.

கோரோ ஒரு முக்கியமான வீரர். இவர் 5 பேர் உதவியுடன் இது வரை 8 கோல்கள் அடித்துள்ளார். ஆனால் 5 பேரும் கோரோவுக்கு உதவினார்களா என்து சந்தேகமே என்கிறார் கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா.
அதே நேரத்தில் கோரோ மற்றும் பர்த்தலோம் ஆகிய இரண்டு வீரர்களும் கடந்த மூன்று போட்டிகளில் ஆடாததால் அணிகள் சற்று பாதிக்கப்பட்டன. கோவா மற்றும் நார்த் ஈஸ்ட் என இரண்டு அணிகளுமே கடந்த மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெறவில்லை.

பொதுவாகவே நாங்கள் சிறந்த முறையில் கோல்களை அடித்துள்ளோம். நாங்கள் எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு, புதிய பாடம் கற்றுக் கொள்ள விரும்புகிறோம் என்கிறார் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா.
ஆனாலும் கோவா அணி அட்டவணையில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் நார்த் ஈஸ்ட் அணி சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றே கூறவேண்டும்.
கோவா அணியின் பயிற்சியாளர் லோபிரா நார்த் ஈஸ்ட் அணிக்கு மிகப் பெரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். கடந்த நான்கு போட்டிகளில் கோவா அணி புள்ளிகளை எடுக்க தவறிவிட்டது. பெரும்பாலும் ஆட்டத்தின் முடிவு டிராவாகத்தான் இருந்தது. அவர்கள் இந்த சரிவைச் சமாளித்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்.
கவுகாத்திக்கு வெளியே நடைபெற்ற 5 ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் அணி சிறப்பாக விளையாடினாலும் அது 2 புள்ளிகளை மட்டுமே பெற்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி, எனக்கும் நிறைய பிரச்சனைகள் உள்ளது. இந்த சீசன் தொடக்கத்தில் எங்களிடம் 22 வீரர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 17 பேரே உள்ளனர். அதில் 2 பேர் விளையாட முடியுமா என்று தெரியவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆட்டங்களில் நாங்கள் விளையாடியுள்ளதால் பலர் காயமடைந்திருக்கிறார்கள் என்றார். அதே நேரத்தில் கோவா அணி தனது ஸ்ட்ரைக்கர் ஜெகோவாவை இழந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
சர்வதேச கோப்பைக்கான ஆட்டத்துக்கு முன்பு கோவா வெளியேறுமா? அல்லது வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
(Photos Courtesy - ISL)