Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் வெற்றியைப் பதிவு செய்தது புனே அணி… ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி !!

புனே : புனேவில் நவம்பர் 21 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 35 ஆவது கால்பந்து போட்டி புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் எஃப்சி புனே அணிக்கும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற புனே அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - FC Pune City vs Jamshedpur FC match result

ஆட்டம் தொடங்கிய 5 ஆவது நிமிடத்திலேயே புனே சிட்டி அணியின் டியோ கார்லஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதின.

அப்போது ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் சுமீத் பாஸி ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது.

ISL 2018 - FC Pune City vs Jamshedpur FC match result

அந்த இரண்டு நிமிடத்திலும் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் புனே அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 62 ஆவது நிமிடத்தில் புனே அணியிலும் 65 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன,

ISL 2018 - FC Pune City vs Jamshedpur FC match result

தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேலாக இரு அணிகளும் கடுமையாக மோதியும் கோல் எதுவும் போடவில்லை. அணிகளில் அவ்வப்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து ஆட்டத்தின் 83 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மேத்தாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 86 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மேட் மில்ஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது எந்த அணியும் கோல் போடவில்லை. இதையடுத்து புனே அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Thursday, November 22, 2018, 13:47 [IST]
Other articles published on Nov 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+