Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புனே அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் அணி சூப்பர் வெற்றி!!

புனே : புனேவில் நவம்பர் 27 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புனே அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 41 ஆவது கால்பந்து போட்டி புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் எஃப்சி புனே அணிக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - FC Pune City vs North East United FC match result

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடின. ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்லோமி அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி கொண்டன. ஆனால் எந்த அணியுமே கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

ISL 2018 - FC Pune City vs North East United FC match result

இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது . ஆட்டத்தின் 55 நிமிடத்தில் புனே சிட்டி அணியின் மார்சிலோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் புனே சிட்டி அணியில் மேத்தாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நார்த் ஈஸ்ட் அணியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் ரீகன் சிங் வெளியேற்றப்பட்டார்.

ISL 2018 - FC Pune City vs North East United FC match result

இரு அணிகளுமே மிகக் கடுமையாக மோதின. தொடர்ந்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நிமிடங்களில் நார்த் ஈஸ்ட் அணியின் ஜுவான் மாசிகா அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.இதையடுத்து நார்த் ஈஸ்ட் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, November 28, 2018, 9:12 [IST]
Other articles published on Nov 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+