Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புனே சிட்டி அணி இப்படி ஒரேடியா சரிஞ்சு போச்சே.. காரணம் என்ன?

புனே : தங்களது முதல் வெற்றியை இன்னும் தேடிக் கொண்டிருக்கும் எஃப்சி புனே சிட்டி அணி நாளை புனே ஸ்ரீஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் என நம்புவதாக அந்த அணியின் இடைக்கால பயிற்சியாளர் பிரதியும் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்எல் போட்டிகள் தொடங்கி முதல் மூன்று போட்டிகள் வரை போர்ச்சுக்கல் நாட்டின் மிகுல் ஏஞ்சல்தான் புனே அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அதன் பின்னர் பிரதியும் ரெட்டி இடைக்கால பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு ஆடிய 7 போட்டிகளில் கேரளா அணிக்கு எதிரான ஒரு போட்டி சமன் செய்யப்பட்டது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 2 புள்ளிகளும் பெற்றது. இந்த நிலையில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக வெற்றி பெறுவோம் என ரெட்டி தெரிவித்துள்ளார்.

ISL 2018 - FC Pune vs Jamshedpur FC match preview

கடந்த சீசனில் இருந்ததைப் போலவே இப்போதும் எங்கள் அணி சிறப்பாக உள்ளது. போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும், மைதானத்தில் நாங்கள் வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகிறோம். எங்களைப் போன்று வேறு சில அணிகளும் உள்ளன.

கடந்த சீசனில் அதிக புள்ளிகளைப் பெற்ற பிரேசிலைச் சேர்ந்த ஸ்ட்ரைக்கர் மார்சிலின்ஹோ திரும்பியிருப்பது அணிக்கு வலு சேர்க்கும் என்றும் பல முக்கிய வீரர்கள் தற்போது ஏடிகே அணிக்கு சென்றுவிட்டார்கள் என்று கூறிய ரெட்டி அது ஒன்றும் எங்கள் அணிக்கு பிரச்சனை இல்லை என ரெட்டி தெரிவித்துள்ளார். தற்போது முதன்முறையாக 25 தகுதியான வீரர்கள் களம் இறங்க தயாராக உள்ளனர்.

ISL 2018 - FC Pune vs Jamshedpur FC match preview

கடந்த சீசனில் 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்த புனே அணி தற்போது அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் சீசர் ஃபெராண்டோ தலைமையிலான ஜாம்ஷெட்பூர் அணி 7 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மேலும் அட்டவணையில் 4 ஆவது இடத்தில் உள்ளது. நாளை அவர்கள் வெற்றி பெற்றால் 2 ஆவது இடத்துக்கு முன்னேறிவிடுவார்கள்.

ISL 2018 - FC Pune vs Jamshedpur FC match preview

இது குறித்து கருத்துத் தெரிவித்த சீசர் ஃபெராண்டோ , புனே அணி மிகச் சிறந்த அணி, மேலும் அபாயகரமான அணியும் கூட. அவர்கள் தங்கள் முதல் வெற்றியைப் பெற கடுமையாக போராடுவார்கள் என்பதால் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ISL 2018 - FC Pune vs Jamshedpur FC match preview

ஜாம்ஷெட்பூர் அணியின் பிரமாண்டம் மற்ற அணிகளில் இருந்து அதை வேறுபடுத்தியுள்ளது. மேலும் ட்ரி அன் கோ அந்த அணியின் பின்னால் உள்ளது. அதே நேரத்தில் மைக்கேல் சூசைராஜ் மற்றும் செஜியோ சின்டேன்ஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஜாம்ஷெட்பூர் அணியில் உள்ளது அவர்களது பலம். மைக்கேல் சூசைராஜ் மிகச் சிறந்த வீரர். அவர் மிக கடுமையாக உழைக்கிறார். நட்சத்திர வீரர் டிம் காஹில் தனது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கௌரவ் முகீ இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை.

(Photos Courtesy - ISL)

Story first published: Tuesday, November 20, 2018, 19:33 [IST]
Other articles published on Nov 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+